பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露 வள்ளுவர் சொல்லமுதம் அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கல் தெததெனத் தண்ணீர் படும' என்பது நாலடிப் பாடலாகும், வானத் தில் உலவும் மதியத்தை ஒருபால் பாம்பு பற்றிக் கொண்டாலும் மற்ருெருபால் மாநில இருளேப் போக்கும் பேரொளியைப் பொழிகிறது. அதுபோலவே உயர்குடியில் தோன்றிய உத்தமர்கள் தம்மை வறுடிை பெரிதும் வாட்டினுலும் ஒப்புரவு செய்தற்கு உள்ளம் சோர்வுகொள்ளார் என்பர் சமண முனிவர். இவ் ஒப்புரவு செய்தலின் உயர்வை வலியுறுத்தப் புகுந்த வள்ளுவர், "ஒப்புரவி துல்வதும் கேடெனின் அஃதெருவன் வித்துக்கோள் தக்க துடைத்து' என்று அருளிஞர். ஒப்புரவு செய்வதால் ஒருவனுக்குப் பெருங்கேடு வரும் என்று எவரேனும் இயம்புவராயின் அக் கேட்டை, ஒருவன் தன்னை விற்ருயினும் பெற்றுக் கொள்ளலாம் என்று வள்ளுவர் சொல்லியதன் கருத்து யாது ? தன்னை விற்றுக்கொள்ளப்படுவதொரு பொருள் இல்லையல்லவா : ஒப்புரவிஞல் கேடு வருமாயின், தன்னை விற்றும் கொள்ளப்படும் பொருள் ஒன்றும் உளதாகும். எனவே ஒப்புரவு செய்தல் என்றும் எள்ளளவும் கேடு தருவதில்லை, நலமே பயப்பது என்ற உண்மையையன்ருே திண்மைவுற விளக்கிளுர் திருவள்ளுவர் ? --- 'ஈதல் அறம்' என் பார் தமிழ் மூதாட்டியார். ஈயென இரத்தல் இழிந்தோன் செயல் என்பர். அங் கனம் இரப் போர் பொருள் இல்லாத வறியசாவர். அவர்கட்கு வேண்டியதொன்று விருப்புடன் அளிப்பதே ஈகை என்பர் திருவள்ளுவர். வறிபார்க்கெசன்(று) ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீ துடைத்து” என்பது அவரது சொல்லமுதம். வறியர் அல்லாதார்க்கு வழங்குவதெல்லாம் ஒரு பய்ன் கருதியே. அது குறி.