பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தானமும் தவமும் 。寧 தீண்டாது. வறியவர் உறுபசியை ஒழிப்பதே பொரு ளுடையார் செய்யத் தகும் அரிய செயலாகும், வறியவர் வயிறே அன்னவர் செல்வத்தை அழியாது பூட்டி வைக்கும் பெட்டகம். இங்ங்ணம் ஏழையரின் பசிப் பிணியைத் தமது ஈகையால் போக்கும் இல்லறத்தார் இணையற்ற வல்லமை பெற்றவர். தமது கடும்பசியைப் பொதுத்தலே தவத்தவர்க்குப் பெருவவியாகும். பிறர் பசியைக் களையும் இல்லறத்தார் வல்லமைக்குப் பிற்பட்டதே தவத்தவர் பெருவலி என்று குறிப்பார் திருவள்ளுவர். 'ஆத்துணர் ஆற்றல் பயோற்றல் அப்பசியை மாற்றுவார் ஆத்தலின் பின்' என்பது அவரது சொல்லமுதம், தவம் புரியும் துறவியரினும் தானம் செய்யும் இல்லறத்தார் ஏற்றமுடையவர் என்று இயம்பிய வள்ளுவர். தவத்தைப்பற்றிச் சொல்லும் கருத்துகளைச் சிறிது நோக்குவோம். இல்லறம் துறவறமாய இரண்ட னுள்ளும் சிறந்தது இல்லறமே என்பதை வலியுறுத்த இல்லறவியலே முதற்கண் வகுத்தார். மேலும், "அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன் பழிப்பு(து) இல்லாயின் நன்று' * என்று இல்வாழ்வின் சிறப்பை வலியுறுத்தினர். இல்லறத்தில் வழுவாது ஒழுகிய அறிவுடையார், பிறப் பிற்கு அஞ்சி வீடுபேற்றின் பொருட்டுத் துறவுபூணுவர். அவரது துறவே தூய்மை நிறைந்து துலங்குமாதலின் இல்லறவியலை யடுத்துத் துறவறவியல் வகுத்தருளிஞர். துறவறத்தின் தலையாய செயல் தவம் ஆகும். அத் தவம் பருமையடையக் காக்கத்தக்க நோன்புகள் பலவு.ை அவற்றை வழுவாது காத்து ஒழுகுவதால் மெய்ஞ்ஞானம் கைவரப்பெறுவர். அந்த மெய்யுணர்வே அந்தமிலா இன்ப வீட்டை அடைவிக்கும் ஆற்றலுடையது.