பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தானமும் தினமும் 1£ திருவுள்ளம். முன்னத் தவம் இல்லாதார் அதனை மேற் கொள்வது அவம் என்றே அறுதியிட்டு உரைக் தின்ருர். தவத்தைச் செய்பவரே தங்கருமம் தவரு து செய்பவர் என்பது வள்ளுவர் கருத்து. தன்னைப்பற்றியும், பிற உயிர்களைப்பற்றியும், தெய்வத்தைப்பற்றியும் வரும் மூவகைத் துன்பங்கட்கு இடமாகவுள்ள உடற்கு வருத்தம் வரும் என்று ஒழியாது தவத்தினைச் செய் தலால், பிறப்புப் பிணி மூப்பு இறப்புகளால் துன்பம் எய்தி வருகின்ற உயிர் ஞானம் பிறந்து வீடு பெறும். ஆதலின் ‘தவம் செய்வார் தங்கருமம் செய்வார்’ என்று: தலைக்கொண்டு போற்றினர். பசுவின் பாலை வற்றக்காய்ச்சக் காய்ச்ச அதன் சுவை குறைவதில்லை. நெருப்பில் தன்ருகச் சுடினும் செம்பொன் தன் ஞெளி குன்றுவதில்லை. பாலின் சுவையும் பசும்பொன் ஒளியும் மேலும் பெருகுவதைக் கானுக கின்ருேம், அவை போலவே, தவத்தவர் தமது நோன்பு களால் வரும் துன்பம் வருத்த வருத்த அவரொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் ஓங்கும் என்பர். "சுட்ச்கட்ரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் கடச்சு நோற்கிற் பவர்க்கு" r என்பது வள்ளுவர் சொல்லமுதம், இத்தகைய தவத்தால் ஒருவன் தனது உயிர் ஐம்பொறிகட்கு அடிமையாகாமல் முழுதும் தனக்கு உரிமையாக்கிக் கொள்ளுவாஞயின் அவனை மாநிலத்து மன்னுயிர்களெல்லாம் தொழும். அன்ஞன் எவராலும் கடக்க முடியாத இயமனையும் கடக்க முடியும். தனது அறத்திற்குப் பகையாய் அழிவு செய் வாரைக் கெடுக்க நினைத்தால் கெடுக்க முடியும் அதனைப் பாராட்டிய மக்களைச் சீராட்டி உயர்த்த நினைத்தால் உயர்த்த முடியும். சபித்தலும் அருளலும் ஆகிய இரு வகை ஆற்றலும் பெறுவான். இப் பிறவியில் முயன்று செய்த பெருந்தவத்தால் மறுமிையில் பெற விரும்பிய பயன்களைப் பெற்றுமகிழலாம்.