பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. சினமும் குணமும் ஆறுவது சினம் என்பது தமிழ் மூதாட்டியின் அமுத மொழி. சினத்தைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் உள. வெகுளி, கோபம், கதம், சீற்றம், செற்றம், சினம் என்பன ஒரு பொருட் சொற்கள். இது மிகவும் பொல்லாத தீய குணமாகும். பல தீவினைகட்குக் இஃது அடிப்படையானது என்பர் அறிஞர். இத்தகைவு, சினத்திற்கு மனத்தில் இடங் கொடுத்து விட்டால் ఫ్రీ மனமுழுமையும் தனதாக்கிக் கொள்ளும் கொடுமை வாய்ந் தது ஆதலின் உள்ளத்தில் சினம் தோன்றுதற்கேஇடத்தர லாக து. ஒருகால் தோன்றினும் அதனை உடனே தணித் தல் வேண்டும். இதகுலேயே சினத்திற்கு இலக்கணம் இயம்புவார்போல ஆறுவது சினம் என்ருர் தமிழன்னை விாகிய ஒளவையார், தணியத்தக்கது. சினம். அதனைத் தணியவிடாது பெருகுமாறு செய்வது பேதைமை என்பதே அம் மூதாட்டியின் கருத்தாகும். சினம் ஆறுவது என்று: கூருமல், ஆறுவது சினம்’ என்று கூறியதன் கருத்துக் கூர்ந்து நோக்கத்தக்கதாகும். கொடிய பாவங்களுக் கெல்லாம் அடிகோலுவதாகிய சினம் சிறிதளவுகூடப் பிறர் அறியுமாறு சிந்தையில் தோன்றவிடுவது முறைமை பன்று என்பதே அவரது ஆழ்ந்த கருத்தாகும், இந்த உண்மையை இனிது உணர்ந்த சிவப்பிரகாசன் சினங் கொள்வார்க்குச் சிறந்த நன்னெறி காட்டுகின்ருள். ஆற்றில் பெருகி வரும் வெள்ளத்தை அணையிட்டுத் தடுத்தலே அருஞ்செயலாகும். தடங்கரையை உடைத்து வெள்ளத்தை ஊருள்ளே விடுதல் அரிய செயலன்று. அது போலத்தான் உள்ளத்தையெல்லாம் தன்வயப் படுத்திக்கொண்டு பொங்கியெழும் சினத்தை அடக்கும் செயலே அரிய குணமெனப் போற்றத்தகும்.