பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶蘇 ள்ைளுவச் சொல்லமுதிக் அதனைப் பெருக விடுவது பேரழிவையே தரும் என்று பேகவார்.

  • உன்னம் கவர்ந்தெழுந்(து) ஓங்கு சினங்காத்துக்

கொன் ளும் குணமே குண மென்க-வெள்ளம் தடுத்தல் அசிதே தடங்கதைதான் பேர்த்து விடுத்தல் அரிதே விளம்பு' என்பது சிவப்பிரகாசர் காட்டும் செந்நெறியாகும். சினம் எழுவதற்கு அவாவே காரணம் என்பர் வள்ளுவர். ஒருவன் கடுஞ்சொல் பேசுவதற்குக் காரண மாவது இச் சினமே. நெருப்புப் பற்றிய இடம் வெந்து நீருகும். ஆளுல் சினத்தீ, தான் தோன்றுவதற்கு |டமானவரை யன்றி, அவர்க்கு இனமானவரையும் அழித்தொழிக்கும் இயல்புடையது. ஆதலின் திரு வள்ளுவர் இச் சினத்தைச் சேர்ந்தாரைக் கொல்லி' என்று குறித்தார். மலைக்கண் உள்ள மூங்கில் மரங்கள் காற்ருல் ஒன்ருே டொன்று உராய்ந்து தீப்பற்றிக் கொள்ளும். அம் மூங்கிலில் முளைத்த தீ, அதனை வேருடன் எரித்துச் சமபராக்குவதன் றிச் சார்ந்து நின்ற வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வெந்து போமாறு செய்யும். அது போலவே தான் ஒருவனது உள்ளத்தில் உதித்த சினத் தீ அவனையும் அவனது உற்ருர் உறவின தையும் அழித்தொழிக்கும் கொடுமையுடையது என்பர் கம்பர் பெருமான். 'மூங்கிலில் பிறந்த முழங்குதீ மூங்கில் முதலற முறுக்குமப் போலத் தாங்களும் சினத்தீ தன்னுளே பிறந்து தன்னுறு கிளையெலாம் தகிக்கும்.' இக் கருத்தைத் தெய்வப் புலவராய திருவள்ளுவச் இரு சிற்றடிக்குள்ளே செப்பும் திட்பம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும்.