பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சினமுக் குணமும் 證象 இனரெரி தோய்வன்ன இன்னு செயினும் புனரின் வெகுளாமை நன்று' iன்று பாடியருளிஞர். வானுற ஓங்கி வளமுற வளர்ந்த மரமொன்றைக் :காடரி கொண்டு ஒருவன் வெட்டுகிருன் அடிமரத் தையே அடியோடு அற்று விழுமாறு வெட்டுகிருன். அங் துனம் வெட்டுவானுக்கு மென்காற்றும் தண்ணிழலும் தந்து நிற்கும் மரத்தின் மாண்பை என்னென்பது அது போலவே குணமென்னும் குன்றேறி நின்ற நல்லார்கள், தமக்குச் சாகும் வரையும் நோவும் துன்பங்களையும் தொடிக்கு ஒன்ருகச் செய்யினும் தாம் உயிர் போகும் அரைக்கும் நன்மையே எண்ணி நன்மையே பண்ணுவர். அஃதன்ருே உயர்ந்த சால்புடைமை ! இன்னு செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பய்த்ததோ சால்பு' என்பதன்ருே வள்ளுவர் சொல்லமுதம். இக் கருத்தை வலியுறுத்தப் புகுந்த தமிழ் மூதாட்டியார், 'சந்தனவும் தீயனவே செய்திடினும் தாமவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையார்-மாந்தர் குறைக்குத் தனையும் குளிர்நிழல்த் தந்து நற்றைக்குமாம் கண்டீர் மரம்' என்று பாடியருளினர். சிறந்த குணங்கள் நிறைந்த பெரியோர் சிறிதும் சினம் கொள்ளார். அவர் சினம் கொள்வராயின் கணப்பொழுதே அச்சினம் நிற்பதாகும். அச்சிறிதளவு சினத்தையும் அதற்குக் காரணமாயினர் தடுத்தல் இக லாது. வில்லை வளத்து வெஞ்சரத்தை நீர் கிழியுமாறு விடுத்தாலும் பிளந்த அப்பொழுதே சேர்ந்து கொன் வதைக் காண்கின்ருேம். அது போலவே சீரொழுகு