பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. வாய்மையும் தூய்மையும் வாயினது தன்மை வாய்மை எனப்படும். அதன் இகல்பு உள்ளத்தே உள்ளதை மறையாது உரைப்பதே. உள்ளென்று வைத்துப் புறமொன்று பேசுவாச் உரை பொய்யானதே. உள்ளத்தின் தன்மை உண்மையாகும். மெய்யின் தன்மைமெய்ம்மையாகும். உள்ளத்தே எண்ணி அதைக் கரவாது வாயால் உரைப்பதே வாய்மையாகும். உனத்தொடு பொருத்த உரைத்தவாறே மெய்யால் செயல் புரிவதே மெய்ம்மையாகும். இங்கனம் உளம், மொழி, மெய் ஆகிய முக்கருவிகளும் முரண்படாது தத்தம் இயல்பில் நிற்பதே தூய்மை எனப்படும். இதனை முப் பொறித் தூய்மை அல்லது திரிகரண சுத்தி என்பர். வடமொழியாளர் சத்தியம் என்று வழங்கிய அத்தை, நம் முன்ளுேர் முக்கூறுபடுத்திய திறம் பாராட்டற் குரியதாகும். உண்மை, வாய்மை, மெய்ம்மை என்ற மூன்ருக்கி, இவை மூன்றும் ஒன்றுபட்டு திற்றலே கர்ந்த தூய்மையெனக் கொண்டனர். உலகில் சிலர் உள்ளத்தில் எண்ணுவதை உரைப்பதில்லை. வேறு சிலர் வாயால் கூறியதைச் செய்வதில்லை. தாம் உரைத்தவை பிறர்க்கே என்று பிறழ்ந்து நடக்கும் பேதையரும் உணரன்ருே ஆதலின் சொல்லும் செயலும் தூய்மைப்படு தற்கு அகத் தூய்மையே அடிப்படை என்பதை வள்ளுவர் தன்கு வலியுறுத்துகின்ருர். ‘புறத்துய்மை நீரான் அமைபுக் அகத்துய்மை வாய்மையால் காணப் படும்: என்பது வள்ளுவர் சொல்லமுதம், மக்கள் உடம்பு துய்மையுறுவது நீராலன்ருே அது போல உள்ளம் துய்மையடைவது வாய்மையால் என்பர் வள்ளுவர்.