பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. கொலேயும் புலேயும் பிற உயிர்களைக் கொல்லுதல் கொலையெனப்படும். இஃது ஐம்பெரும் பாவங்களுள் மிகவும் கொடியதொன்ரு கும். இதனைத் திருவள்ளுவர் கொல்லாமை என்ற அதி காரத்தால் விலக்குமாறு விளக்கி உரைக்கிருர், ஒருயி ரையும் கொல்லாதிருப்பது அறங்கள் எல்லாம் ஒருங்கு செய்வதற்கு ஒப்பாகும்; பிறிதோர் உயிரைக் கொல் புரிவது பாவச் செயல்கள் எல்லாவற்றையும் ஒவாது விளக்கும் ; கொலைப் பாவம் விளக்கும் துன்பம் பிற பாவங்கன் எல்லாம் கூடிகுலும் விளக்க மாட்டா என்று விளம்புவார். அறவினை யாதெனின் கொல்லாமை, கோறல் பிறவினை எல்லாம் தரும்' என்பது வள்ளுவர் சொல்லமுதம். கொல்லாமை என்னும் நல்லறத்தின் மாண்பைக் கூற வந்த பழம் புலவர் ஒருவர், யானேயின் அடிக்குள் அடங்காத அடியே கிடையாது ; அது போலக் கொல் லாமை அறத்துள் அடங்காத நல்லறம் எதுவும் இல்லை என்று சொல்லிப் போந்தார். ஆணே யடிபுள் அடங்கா அடியில்ல்ே தனதுபோல் நிறகின்ற தன்:ைதான்- ஊனுயிரைக் கொல்ல அறத்தின் கொழுநிழற்கே புள்ளடங்கும் எல்ல. அறமும் இசைந்து' - என்பது அப்புலவரது உவமை அமைந்த அரியமொழி, மேலும் திருவள்ளுவர் இவ் அறத்தின் சிறப்பினை உறுதியுற விளக்குகின்ருச். ஒருவன் தான் உண்பதனைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்துப் பல்லுயிர் கனேயும் காத்தல் வேண்டும். அதுவே அறநூல் வகுத்த