பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிகாலையும் புலேயும் §g நன்றிது என்றவன் காவில் பெய்தவன் என்றிவர் அறுவரும் தரகம் எய்துவர்' புலால் உண்பவரை நோக்கித் திருவள்ளுவர் இரங்கிக் கூறும் மொழி, கற்பவர் கருத்தைத் தொடுவ தாகும். புலால் என்பது பிறிதோர் உடம்பின் புண் ணன்ருே அது துரங்தன்து என்பதைப் புலே செய்வார் உணர்கின்ருர் அல்லரே! அதன் இழிவை அறிந்தவர் உண்ணமாட்டார் அன்ருே உயிர் நீங்கிய உடம்பு பினம் அல்லவா பினத்தைக் கறி சமைத்து உண்னும் பேதைமையை யாதென்பது ? தெளிந்த அறிவுடையான் இவ் இழிசெயலைப் புரிவாரோ என்று இரங்குவார் வள்ளுவர். தமது உடம்பில் புண்ணை எவரேனும் அறுத்துச் சமைப்பரோ? கழுவியன்ருே மருந்திடுவர். பிறிதோர் உடம்பின் செம்புண்னே வறுத்து வற்றலாக்கித் தின்னல் வெறுத்தற்குரிய செயலன்ருே ! 'தம்புண் கழுவி மருந்திடுவர் தாம்பிறிதின் செக்புண் வலுத்த வறைதின்பர்-அந்தோ நடுநின் லுலக நயனி ைமாந்தர் வடுவன்ருே செய்யும் வழக்கு" என்பர் முனைப் பாடியார், - கொலேயும் புலேயும் தவிர்ந்தொழுகுதலாகிய அறம் ஆயிரம் வேள்வி செய்தலினும் மேம்பட்டதாகும். அவ் அறத்தை வழுவாது மேற்கொண்டு ஒழுகுபவனே எல்லா உயிர்களும் கைகுவித்துத் தொழும். கொல்லாமையும் புலால் உண்ளுமையும் ஆகிய இரண்டு அறமும் கொண்டார்க் கல்லது ஒன்றே உடையார்க்கு அதஞல் பயனில்லை என்பதை வலியுறுத்த, 'கொல்லான் புல்ா?ல மறுத்தானைக் கைகூப்பி' எல்லா உயிரும் தொழும்' என்று வள்ளுவர் சொல்லியருளிஞர்.