பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணிவும் கனிவும் శ్రీ பொருளாகக் கொண்டு அழியாமற் காக்கவேண்டும் என்பார் வள்ளுவர். இவ் வொழுக்கத்தை வழுவாமல் காப்பவன் மறுமையில் வானுலகம் பெறுவான். அவனது உயர்ச்சி மலேயினும் மானப் பெரிது என்று புகழ்ந்து பேசுவார். பணிந்து நடக்கும் கனிந்த மனமுடைய மக்களே, அறிவிலர் என்று எண்ணி இகழ்ந்து நடக்கும் இயல் பினரும் உளர். அன்னவர் முன்னவரால் எண்ணிய வளவில் இன்னலுற்று அழிவர். நீர் வழியும் மடைத் தலைவில் ஒடு மீன் ஒட, உறுமீன் வருமளவும் வாடி யிருக்கும் கொக்கனைய மக்களைக் குறையுடையார் என்று கொள்ளுதல் தகாதன்ருே ஆதலின், அடிக்கக் உடிையார் அறிவிலர் என்றெண்ணிக் கடிக்கக் கருதவும் கோண்டிா’ என்பர் தமிழ் மூதாட்டியார். செல்வம், கல்வி, குடிப்பிறப்பு முதலியவற்ருல் சிறப்புற்றவர்கள் பணிவுடையவராகவே இருக்கவேண்டும். அதுவே அவர்கள் பெற்ற பெருமைக்கு உற்ற இலக்கண மாகும் என்பதைப் பலவிடத்தும் வள்ளுவர் சொல்விச் செல்லுவார். பெரியவர்கள் என்றும் எவரிடத்தும் பணிந்தே நடப்பர். சிறியவர்களோ என்றும் எவ ரிடத்தும் செருக்குடனேயே நடப்பர் என்று குறிப்பார், 'பணியுமம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து' என்பது வள்ளுவர் சொல்லமுதம், எந்நாளும் தன்னிலையில் தாழாது வாழும் மான வாழ்வைப்பற்றிப் பேசுமிடத்தும் பெருக்கத்து வேண்டும் பணிதல்' என்று குறிக்கிருர். செல்வமில்லாது வறுமை புற்று வாழ்பவன் பெருமிதமாக வாழவேண்டும். வறி