பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணிவுக் கனிவுத் 全š வள்ளுவரது சொல்லமுதத்தில் காணும் கனி, காய்களே விளக்கப் போந்த உரையாசிரியராகிய பரிமேலழகர் இன்சொல்லின் உயர்வையும் வன்சொல்லின் இழிவையும் அழகுற விளக்குவார். இனிய கனிகள் என்றது. ஒளவை புண்ட தெல்லிக்கனி போல அமிழ்தாவனவற்றைக் குறிக்கும் என்பார். இன்னுத காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சாவனவற்றைக் குறிக்கும் என்பார். அமுத நெல்லிக்கனி, அவ்வை மூதாட்டிக்கு, அரிய நல்வாழ்வை அளித்ததன்ருே அஃதேபோல் இன்சொல்லும் இனிய வாழ்வை ஒருவற்கு ஈயும். நச்சுக் காயோ ஒருவனது நல்வாழ்வைப் பாழ் செய்துவிடும். அஃதேபோல் வன்சொல்லும் ஒருவனது பெருவாழ்வையே அழித்து ஒழித்துவிடும். உள்ளக் கணிவைத் தெள்ளத் தெளியக் காட்டும் இனிய சொல்லிற்கு வள்ளுவர் இலக்கணம் வகுக்கின்ருர். வஞ்சனே இல்லாத நெஞ்சத்தில் அச் சொல் பிறக்க வேண்டும். அன்போடு கலந்து சிறக்கவேண்டும். இத்த கைய உண்மை அன்போடு உரைக்கப்படும் சொல்லும் அறத்தினே உணர்ந்தார் வாயில் பிறத்தல் வேண்டும். அதுவே இன்சொல் என்று சொல்லும் தகுதியுடையது. அறமுணர்ந்தார் வாயில் மறந்தும் தீச்சொல் பயில்ல: தில்லை. அவர்கள் சொல்லின் திறம் ஆய்ந்து நல்லனவே சொல்லுவர். இதனை, "இன்செலால் ஈரம் அணேஇப் படிநிவைாம் செம்பொருள் கண்டிர்வாய்ச் சொல்' என்னும் பொன்குன மொழியால் புலவர் விளக்கிப் போந்தார். ஈதலறமே ஒருவற்கு இணையற்ற புகழைத் தர வல்லது. உள்ளம் உவந்து ஒருவற்கு வேண்டியதொரு பொருளைத் தருதலினும் இன்சொல் வழங்குவது மிக நன்று என்று இயம்புவார் வள்ளுவர். வாயில் இன்சொல்