பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

萤 வள்ளுவச் சோல்லமுதம் இறக்கும்போது, முகம் மலர்ந்து இனியகுய்த் திகழ வேண்டும். அகமும் முகமும் மலர வழங்கும் சொல்லே எல்லோரையும் வயப்படுத்தவல்லது. ஒருவனைச் சேய் மையில் கண்டபொழுதே முகம் மலர்த்து இனிதாக தோக்கவேண்டும். அவன் அண்மையில் தண்ணியவழி மனத்துடளுகிய இனிய சொற்களைச் சொல்லுதல் வேண்டும். இங்ங்ணம் மனமும் மொழியும் கனிந்த செயலில்தான் அறமே விளங்குகின்றது என்று வினம் பிளுள் வள்ளுவர். முகத்தான் அமர்த்தினிது தோக்கி அகத்தானும் இன்சென் னேதே அறம்' என்பது அவர்தம் அமுதமொழி. இன்முகத்தோடு கூடிய இன்சொல், எல்லார்க்கும் இன்பத்தை மிகுவிக்கும் இயல்புடையது. அது கூறு வார்க்கும் கேட்பார்க்கும் பேரின்பம் விளக்கும் பெருமை புடையது. இன்சொல் பேசுவார்க்கு என்றும் துன்பம் தரும் வறுமை உறுவதில்லை. அவர்கட்குப் பாவங்கள் தேய்ந்து புண்ணியங்கள் வளரும். இம்மைக்கு நீதி யையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும். இங்ங்ணம் இருமையிலும் பெருமையைத் தரும் இன் சொல்லையே எல்லாரும் பேசுதல் வேண்டும். வன்சொல் கூறும் புன்மையாளர்களின் பொருட்டுப் பொய்யில் புலவர் பெரிதும் இரங்குகின்ருர், எத்தகை பார்க்கும் பிறர் கூறும் இன்சொற்களே இன்பம் தரும் என்பதை ஒருவன் தானும் அனுபவித்து அறிகின்ருன். அவனே பிறரிடத்து வன்சொல்லேப் பேசுவாகுயின் அவன் அனுபவத்தால் விளைந்த பயன் என்ன ? என்று கேட்கிருச் வள்ளுவர். அவ் வன்சொல் பிறர்க்குத் தீங்கு விக்ாக்குமே என்பதை எண்ணுதவன் மண்ணுே மரமோ என்று சொல்லாமல் கொள்ள வைக்கும் வள்ளுவர் திறத்தை என்னேன்பது i .