பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. பொறையும் பொருமையும் சான்ருேர்க்கு அமையவேண்டிய பண்புகளுள் பொறையும் ஒன்ருகும். இதனைப் பொறுமை என்றும் புகல்வதுண்டு. ஒருவன் தனது அறியாமையாலோ, பிற காரணத்தாலோ மற்றவர்.பால் குற்றம் செய்கின்ருன். அப் போது மற்றவரும் அக் குற்றத்தை அவன்பால் செய்யாது பொறுத்துக் கொள்ளல் வேண்டும். அதுவே பொறை புடைமை என ப்படும். குற்றமே இல்லாது குனமே உருவாகத் திகழ்பவன் இறைவன் ஒருவனே. மக்களில் குற்றமற்ருேர் எவருமிலர். முழுதும் குணமே நிறைந்த மக்களும் முற்றும் குற்றமே நிறைந்த பெற்றியரும் உலகில் எங்கும் இலர் என்று வள்ளுவரே சொல்லுவார். ஆதலின் ஒருவன்பால் அமைந்த குணத்தையும் குற்றத்தையும் ஆராய்ந்து, மிக்கது கண்டு தக்கவன் என்ருே தகவிலன் என்ருே கொள்ளுதல் வேண்டும் என்பார். நலத்தால் மிக்க நல்லோரிடத்தும் திங்களிற் கறைபோலச் சிறுகுறை இருக்கக் காண்கிருேம். தீமையே வடிவாய்த் திரண்ட தீயவரிடத்தும் ஒருசில நற்குகினங்கள் அமைந்துள்ளன. ஆகவே, ஒரு சிறு குற்றமும் இல்லாத நல்லோர் இத் தொல்லுலகில் இலர். நெல்லிற்கு உமியுண்டு. நீர்க்கு நுரையுண்டு பூவிற்குப் புல்லிதழ் உண்டு. உமியைக் கொண்ட குற்றத் திற்காக நெல்லை வெறுத்துத் தள்ளுவார் உண்டோ : துரை கொண்ட குற்றத்திற்காகத் தண்ணிரை உண்ணுது மண்ணுது ஒதுக்குவார் உண்டோ ? புல்லிதழ் பெற்ற குற்றத்திற்காகப் பூவை வெறுப்பவர் யார்? எவரும் இல்.ை யன்ருே இவ் உண்மையைப் போன்றே ஒருவன் மற். வன்பால் காணும் குற்றத்தைப் பொறுத்துக் குணத்தை:ே குறிக்கொண்டுபோற்றும்கொள்கையுடையளுகவேண்டும்