பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఛీజ్తో வள்ளுர்ை சொல்லமுதக் பொறுமைக்கு எடுத்துக் காட்டாக நிலத்தைக் குறிப்பர் புலவர். நிலமோ தெரியவரும் பெருமை உடையது. மிகுந்த திண்மை உடையது. குத்திகுலும் வெட்டிகுலும் பொறுத்துக்கொள்ளும் பொறையுடையது. பருவத்திற்கும் முயற்சிக்கும் தக்கவாறு பயனளிக்க வல்லது, இத்தகைய நல்லியல்புகளையுடைய நிலத்தை 'அகழ்வாரைத் தாங்கும் நிலம்' என்று குறித்தார் வள்ளுவர். பெரிய இருப்புக்கோல்களைக் கொண்டும் ஆற்றல் மிக்க பொறிகளைக்கொண்டும் எவ்வளவு 、 மாகத் தோண்டினுலும் அங்ஙனம் தோண்டுவோஇர விழாமல் தாங்கும் தன்மை உடையது அந்நிலம், அதைப் போல ஒருவன், தன்னை இகழ்வாரைப் பொறுத்தல் இன யற்ற அறம் என்று குறித்தார் வள்ளுவர். அகழ்வதைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் த'ை என்பதன்ருே அவர் சொல்லமுதம் ! திருவள்ளுவர் நிலத்திற்குக் கொடுத்த அடை மொழிகளால் கொள்ளத்தக்க பொருள், பொறையி னுக்கே வரம்பு கோலுவதுபோல அமைந்துள்ளது. சாதலைப் போன்று, நோதகலச் செய்யும் துன்பம் வேருென்றும் இல்லையென்று வள்ளுவரே சொல்லு வார். சாதலின் இன் குததில்லை என்பது அவர்தம் வாய்மொழி. அத்தகைய சாவைத் தரும் கொலையைப் போன்ற குற்றத்தைச் செய்தவரையும் பொறுத்தும் பாதுகாத்தல் வேண்டும் என்று பொருள் கொள்ளுமாறு வள்ளுவர் காட்டும் உவமை அமைந்துள்ளது. தமிழ் மூதாட்டியாராகிய ஒளவையார் பெருமை அடையார் மேற்கொள்ளும் பொறுமைக்கு ஒர் எல்லையே வகுத்துக் காட்டுகிருர். அவர் மரத்தைப் பொறுமைக்கு எடுத்துக்காட்டாகக் குறித்தார். வானுற ஓங்கி வளம்பெற் வளர்ந்த மரமொன்றை, ஒருவன் கோடரி கொண்டு