பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொறையும் பொருமையும் 53 அடியோடு வெட்டுகிருன். அங்ங்ணம் வெட்டுவானுக்குக் களப்புத் தோன்ருத வண்ணம் தண்ணிழலையும் மென் காற்றையும் அம்மரம் உதவுகின்றது. அது வெட்டுண்டு தரையில் வீழும்வரைக்கும் வரையாது அந்த உதவியைச் செய்து கொண்டிருக்கிறது. வெலிலுள் நிற்பான் ஒருவன் வேதனை எய்துமாறு அவன் கால்களை வெட்டு தற்கு மற்ருெருவன் வாள் கொண்டு வீசுகின்ருன். அவனுக்கு வெட்டப் பெறுவான் குடைபிடித்து நிழல் கொடுத்தலோ, விசிறி கொண்டு காற்றெழுப்புதலோ எங்கேனும் கண்டதுண்டோ? பகுத்தறிவற்ற மரத்தி னிடத்தே அப் பண்பைக் காணுகிருேம். அம் மரத்தைப் போன்றே, சான்ருேள் தமக்குப் பிறர் உயிர் நீங்குத் துணையும் பெருந்துயரைச் செய்தாலும் தாம் அவர்க்குத் திங்கு நினையார் , தம்மால் இயன்ற உதவியைச் செய்து காப்பர். இங்ங்னம் பொறையுடையாரை மரத்தொடு பொருத்திக் காட்டும் தமிழ் மூதாட்டியாசின் புலமைத் திறம் போற்றற்குரியதாகும். 'சந்தனையும் தீயனவே செய்திடினும் தாவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர் குறைக்குத் தனையும் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம்' என்பது அவ்வையாரின் செவ்வையான மொழி. ஆன்றமைந்த சான்ருேர்க்கு இலக்கணம் வகுத்த வள்ளுவர் இன்னு செய்தார்க்கும் இனியவே செய்தல்’ என்று குறித்தருளிஞர். இவ்வியல்பு அவர் பால் அமைய வில்லையாயின், சால்பு என்ன பயத்ததோ ?’ என்று வின் விஞர். சான்ருேர் கடனைக் குறிக்கவந்த சமன் முனிவர் ஒருவர், "தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்திமற்(று) எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால்-உம்மை