பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்தி வள்ளுனரி சோல்லமுதம் எரிவாய் திரயத்து வீழ்வர்கொல் என்று பரினது உம் சான்ருேர் கடன்’ என்று நாலடி நூலில் நவின்றருளினுர், சான்ருேச் பிறர் தம்மை இகழ்ந்தால் பொறுத்துக் கொள்வர். அஃதன்றி, இவர் எம்மை இகழ்ந்த தீவினைப் பயனுல் மறுமையில் மீளா நரகத்தில் வீழுவரே என்றும் இசங்கி வருந்துவர். பிறர் செய்த பெருங்குற்றத்தையும் பொறுத்துக் காத்திசல்மட்டும் போதாது. அக் குற்றத்தை மனத்தில் கொள்ளாது அப்பொழுதே மறத்தலும் வேண்டும் என்று குறித்தார் வள்ளுவர். அதுவே குற்றம் செய்தார்க்குக் கொடுக்கும் ஒறுப்பு என்றும் குறிப்பார். 'இன்னுசெய் தாரை ஒறுத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல்" என்பது அவர்தம் சொல்லமுதம். இங்ங்ணம் குற்றம் பொறுக்கும் பொறை, வன்மையுள் வன்மையாகும். ஒருவன் தன்பால் அமைந்த சால்புக்குக் குறை ஏற்படா திருக்கப் பொறையைப் போற்றி ஒழுகவேண்டும் என்பார். பிறர் தீங்கைப் பொறுத்தலின்றி ஒறுத்தாரை அறி வுடையார் ஒரு பொருளாக உள்ளத்தில் கொள்ளார். அதனைப் பொறுத்தாரையோ பொன்போல் பொதித்து போற்றுவர். ஒறுத்தார்க்கு அதனை செய்த ஒருநாளே இன்பமே உளதாகும். பொறுத்தார்க்குப் பூவுலகம் அழிவு மனவும் புகழ் உண்டாம். உலகத்தில் உயர்ந்த புகழை பன்றிப் பொன்ருது நிற்பது ஒன்றில்லையன் ருே ! செல்வம், கல்வி, வீரம் முதலியவற்ருல் எழுந்த செருக்குக் காரணமாகப் பிறர்க்குத் தீங்கு செய்வார் உளர் அத்தகைய தீங்கைச் சான்ருேர் தம் பொறுமையின் பெருமையால் எளிதில் வெல்லுவர் என்பார் வள்ளுவர் “வெல்வது வேண்டின் வெகுளி விடல் என்று விளம்பும்