பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொறையும் பொருகையும் 5? நிய பண்பினைப் பாவி என்றே கடிந்துரைத்தார் வள்ளுவர். அழுக்காறு என ஒரு பாவி என்பது அவரது வாய்மொழி. எல்லாப் பாவங்களையும் கொடுக்கும் கொடிய பண்பா தலின் அதனை ஒப்பில்லாத பாவி என்று உரைத்தார். அஃது இம்மையில் ஒருவனது செல்வத்தைக் கெடுத்து மறுமையில் நரகத்திலும் செலுத்திவிடும். அவனே அன்றி அவனைச் சார்ந்த சுற்றமும் அளவிலாத துன்பத்தை அடையும் என்பார். கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பது உம் உண்பது உம் இன்றிக் கெடும்’ என்பது வள்ளுவர் சொல்லமுதம். ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதன் கண் பொருமை கொள்ளுவாஞயின் அவன் இம்மையில் உண்ண உண வின்றி, உடுக்க உடையின்றி எண்ணரிய துன்பங்கனே எய்துவான். அவன் செய்த பாவத்திற்கு அவனது சுற்றமும் அத்தகைய துன்பங்களுக்கு உள்ளாகும். இங்ங்ணமாயின் அழுக்காறு எத்தனைக் கொடிய பாவமாகக் கொள்ளப்படும் ! அதனுலன்ருே வள்ளுவர் அதனைப் பாவி என்றே குறிப்பிட்டார் ! மூவுலகையும் அடக்கியாண்ட மாவலிச் சக்கரவர்த்தி வின் செருக்கை அடக்குதற்குத் திருமால் வாமனளுக வந்தான். அவன்பால் அருந்தவம் இயற்ற மூன்றடி மண் வேண்டி நின்ருன். அப்போது மாவலியின் பக்க மிருந்த அசுர குருவாய சுக்கிரன், மாயவன் தந்திரத்தை உணர்ந்து மாவலியின் கொடையைத் தடுத்தான். வள்ளன்மை உள்ளம் படைத்த மாவலியோ சினம் கொண்டு சுக்கிரனைக் கடிந்தான். எடுத்தொரு வருக்கொருவர் ஈவதனின் முன்னே தடுப்பது நினக்கழகிதே தகைவில் வெள்ளி