பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$63 வள்ளுவர் சொல்லமுதம் சோழனுக்கும் சேரமான் கணக்கால் இரும்பொறைக்கும் திகழ்ந்த போரைச் சிறப்பித்துப் பொய்கையார் என்னும் புலவர் களவழி நூல் பாடிஞர். தனிப்பட்ட இலக்கியங்களாலும் பாராட்டப் பெற்ற தமிழ் மறவருடைய வீரத்தைத் தெய்வப் புலவர் படை மாட்சி, படைச்செருக்கு என்னும் இரு பகுதிகளால் விளக்குகின்ருர், படை என்னும் சொல் படு' என்ற பகுதியடியாகப் பிறந்தது. பகைமை கொண்டு எதிர்ப் பாறை அழிக்கும் ஆற்றல் உடையதே படை எனப்படும். ஆற்ற எதுவே படிை' என்பது வள்ளுவர் சொல்லமுதமாகும். உயிரையும் உடலையும் வேறு வேருகக் கூறுபடுத்தும் எமனே வெகுண்டு வந்து எதிர்த்தாலும் அஞ்சாது நெஞ்சொத்து எதிர் நின்று தாக்கும் ஆற்றல், படையினுக்கு அமைய வேண்டும் என்பார் வள்ளுவர். படை என்னும் சொல் படுவது, படுப்பது என்ற இருபொருளையும் தருவதாகும். படை, தன்னை எதிர்த்த பகைவரை அழித்து வெற்றி கொள்ளவேண்டும். போரில் தோல்வியுறும் நிலை ஏற்படுமாயின் புறங்காட்டாது உயிரைப் போக்குதல் வேண்டும். இவ்விரண்டு இயல்பு களும் உடையதே படை என்பதை அச் சொல்லே வலி வுறுத்துகின்றது. நாடாளும் வேந்தர்க்கு போரில் ஊறுபடுதற்கு அஞ்சரத வீரமுடைய வெல்படை அமையவேண்டும். அப் படையே அரசருடைய செல்வங்களுள் தலைமை அயானது என்பார் வள்ளுவர். அத்தகைய படைவீரர் வழிவழியாக வரும் மறவர் மரபினராக இருக்கவேண்டும் அவர்கட்குத்தான் தொலைவிடத்தும் உலேவஞ்சா வலிமை உனதாகும். மானமும் மாண்ட வழிச் செலவும் மன்னரால்