பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்பும் பகையும் 73 களும் தம்முள் பலகால் பழகிய காரணத்தாலேயே ஒருவரை ஒருவர் பிரிதற்குப் பெரிதும் வருந்தினர். ஒரு நாள் பழகினுலும் பெரியோர் நட்புப் பெரிதும் வேரூன்றி விடும். நூறு ஆண்டுகள் பழகிளுலும் மூர்க்கள் தம் தட்பு நீர்க்குள் பாசியைப்போல் வேர்க்கொள்ளாது என்று விளம்புவார் ஆதிவீர ராமர், "உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்’ என்பது வள்ளுவர் சொல்லமுதம். இதஞலேயே சங்கத் தலைவராகத் திகழ்த்த தக்கீசர், மற்றைய புலவர்களைப் பிரிய தேர்ந்த காகி, ஒன்றுயிர்த் துணையாம் சங்கத்(து) உறவை எப்பொழுது காண்பேம்' என்று ஏங்கிளுர், உணர்ச்சியொத்தல் காரணமாக உண்டாகும் நட்பே ஒப்பற்றது என்பது வள்ளுவர் உள்ளம், இதனே விளக்க, உரையாசிரியராகிய பரிமேலழகரே, கோப்பேருஞ் சோழனுக்கும் பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி யொப்பது என்று குறிப்பிட்டார். கோப்பெருஞ் சோழன் சோழ நாட்டை உறையூரில் இருந்து அரசாண்ட பெருமன்னன். பிசிராந்தையார் பாண்டிய நாட்டிலுள்ள பிசிர் என்ற ஊரில் வாழ்ந்த பெரும் புலவர், ஆத்தை என்பது அவரது பெயர். பிசிர் என்னும் ஊர்ப்பெய ருடன் சேர்த்துப் பிசிராந்தையா என வழங்கப்பெற்ருச். இவர் அறிவு நிரம்பிய மனைவியையும் மக்களையும் தம் கருத்தின்படி குறிப்பறித்து ஒழுகும் ஏவலானதையும் உடையவர். தமது ஊரில் வாழும் சான்ருேர் பலருடன் பழகியொழுகும் பண்புடையவர். வேற்று நாட்டவராகிய இவர், கோப்பெருஞ் சோழனைப்பற்றிக் கேள்வியுற்ருள். அவனின் உயர்குணங்களைப் பலகால் நினைந்து உண