பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஃபும் பகையும் 8 : பெருங்கேடு விளைப்பர். இவர்கள் கண்ட பொழுது தனித்த முகங்காட்டிக் களிப்பாக உரையாடுவர். நெஞ் சத்து வஞ்சமே நிறைந்து ஒழுகுவர். "புறம்தட்(டு) அகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை வெளியிட்டு வேருதல் வேண்டும்' என்பார் குமரகுருபரர். உடம்பில் தோன்றிய புண்ணைக் கருவி கொண்டு அறுத்தேனும் மருத்துவம் செய்து ஆற்று தல்வேண்டும். அப் புண்ணே, நமது உடம்பைசி சார்ந்ததே என்று எண்ணிப் பொதிந்து வைத்தால் புழுத்து தாறி உடலையே அழித்துவிடும் அன்ருே ஆதலின் கூட்ா நட் பினராய வஞ்சரை அஞ்சி அகலுதல் வேண்டும். இன் ஹேல் இவர்கள் உட்பகையாயிருந்தே உயிர்க் கேடு திரைப்பர். காமமும் வெகுளியும் காரணமாகவே பகைமை விண் கின்றது. மனத்தால் மாறுபட்டு ஊறிழைக்கும் எண்ணமே பகைவர்பால் என்றும் பெருகி நிற்கும். நேராக எதிர் நின்று தம் எண்ணத்தை நிறைவேற்ற இயலாத இழிஞர் வஞ்சித்து ஒழுகுவர். தட்பாளர் போன்று நடித்து உட் பகையாய் ஒழுகி நிற்பர். தமது பகைமை உணர்ச்சிக்குப் பயன் விளேயும் காலத்தை எதிர் நோக்கியே பொய்த்தட் பாடுவர். அங்ங்னம் வஞ்ச தட்பினராய் ஒழுகும் உட் பகைஞாால் விளையும் கேடு அறிந்த பகைவரால் அடையும் கேட்டினும் பெரிதாகும். மெய்ப்பொருள் வேந்தரை அற்றத்தில் வெல்ல வந்த முத்ததா தன் பொய்த்தவ வேடம் புனைந்து வந்தானன்ருே அவன் போரில் நேராக எதிர்த்து நின்று வென்றி காண முடியாமையால் வஞ்சக மரக மெய்யெலாம் நீறு பூசி, வேனிகள் முடித்துக்கட்டி முனிவனைப்போல் வந்து நினைத்ததை முடித்தான். அவனது சொல் இனியதாக இருப்பினும் மெய்ப்பொருள் வேந்தர்க்கு உயிர்க் கேட்டையன்ருே விளைத்தது ? தலின் சொல் வணக்கம் ஒன்ஞர்கண் கொள்ளற்க: என்று சொல்லுவார் வள்ளுவர். வ: சொ. i-ே