பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதி ள்ைளுவச் சோல்லமுதம் பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்' என்பது அவர்தம் சொல்லமுதம். ஒருவர் பெருமை பெறுதற்கு இரு காரணங்கன் உள. ஒன்று குடிப்பிறப்பு மற்ருென்று தொழில் சிறப்பு. வாழையடி வாழையாக வரும் சிறந்த குடியில் பிறப்பதே பெருமை. ஆஞல், அக் குடிப் பிறப்பிற்குப் பொருந்தாத தீயொழுக்கங்கள் சேருமாயின் அச் சிறப்பு அகல்வதாகும். இதனையே பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் என்று பேசுவார் வள்ளுவர். சிறந்த குடியில் பிறந்தாரிடத்து இயல்பாகவே உயர்ந்த பண்புகள் அன்ந்ேதிருக்கும். கருத்தும் செல்லும் செயலும் தம்முள் மாறுபடாத செம்மையும், பழி பாவங்கட்கு அஞ்சும். தானமும் அவர்க்கு இயல்பாக அமைந்தவை. இவிைல் அமைதற்குக் கல்வியறிவு, அன்னுர்க்குத் தேவையில்லை. அவர்க்ள் வறியாரை மலர்ந்த முகத்துடன் என்றும் வரவேற்பர்; தம்பால் உள்ளனவற்றைக் கரவாது உவந்து ஈவர் அன்பு கனிந்த இன்சொற்களைப் பேசுவர்; ஆரையும் இகழார். பல்கோடிச் செல்வத்தைக்கொண்டு ஐ.ாடுப்பினும், தம் பெருமை குன்றும் தொழில்களேம் புரியமாட்டார். பிறர்க்குக் கொடுக்கப் பொருள் இல்லாது வறுமையுற்ற காலத்தும், தம் வள்ளன்மையில் குறையார், சித்திர வேலைப்பாடுகள் மிக்க வியன்பெரு மாளிகை இல் செய்கை அழிந்து சிதல் மண்டுவதும் உண்டு. எனினும், தங்குதற்கு இடனின்றி முழுதும் அழிதல் కడి). முழுநிலவைப் பாம்பு ஒரு பக்கம் பற்றியி: தி யினும் மற்ருெகு பக்கத்தால் ஒளி வீசி உலகை விளக்குமன்ருே வெள்ளப் பெருக்கு இல்லாத வேனிற். காலத்தும் ஆறு, தன்யால் ஊறிவரும் நீரால் உலகை ஊட்டுமன்ருே இவற்றைப்போலவே குடிப் பிறந்தார்க்கு வறுமை ஒருகால் பெருகி வருத்தியதாயினும் ஒப்புரவிற்கு ஒல்கார் என்று சொல்லும் நாலடி தன்னுரல்.