பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குத்தமும் சுத்தமுக் இ7 கிடத்திக் கொன்ருன். கன்றை இழந்த தாய்ப்பசு கதறு வதுபோலத் தானும் தனயனே இழந்து தவிப்பதே, மகன் செய்த குற்றத்திற்குத் தக்க தண்டனையாகும் என்று தன் குற்றம் நீக்கத் தலைப்பட்டான். அத்தகைய மனுவேந்தனது அருமந்த அரசாட்சியைச் சேக்கிழார் பெருமான் தெய்வமணக்கும் செய்யுளால் வியந்து போற்றிசூர். இங்கனம் குற்றம் நீங்கிய கொற்றவர் பலர் சிறப்பினே நற்றமிழ்க் காவியங்கள் தயத்து பாராட்டு கின்றன. சுற்றம் சூழ வாழ்பவனே செல்வம் பெற்ற பயனைப் பெரிதும் காண முடியும். அன்பில் குறையாத சுற்றம் ஒருவனுக்கு அமையுமாயின் பல்வகைச் செல்வங்களும் அவனுக்குச் செழித்தோங்கும். உண்மையான அன்பு நிறைந்த உறவினருடன் உள்ளம் கலந்து பழகவேண்டும். அங்ஙனம் அளவளாவிப் பழகாதவன் வாழ்வு, கரை இல்லாத குளத்தில் நீர் நிறைந்ததற்கு ஒப்பாகும் என்று உரைத்தார் தெய்வப்புலவர். 'அளவள வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று' என்பது அவர் சொல்லமுதமாகும். г. * காகம் உறவு கலந்துண்னக் கண்டிர்' என்ருர் தாயுமானவர். காக்கை தனக்குக் கிடைத்த இரைப் பொருளைத் தனித்திருந்து உண்ண எண்ணுவதில்லை. தனது இனமாகிய பிற காகங்களையும் கரைந்து அழைத்து உடனிருந்து உண்ணும் உயரிய இயல்புடையது. அத் தகைய காக்கையைப் போன்று சுற்றம் பேணும் பெற்றி யர்க்கே ஆக்கம் பலவும் பெருகும் என்ருர் பெருநாவலர், அ. சொ..!!!-7