இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
98 வள்ளுவச் சொல்லமுதம் 'காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்ன நீ ரசர்க்கே உள’ என்பது அவர் சொல்லமுதமாகும். நலங்கன் பலவற்றிற்கும் காரணமான சுற்றத்தாரை ஒரு சிறு குற்றம் கண்டு வெறுத்தலும் வெகுளலும் பொருத்தமற்ற செயலாகும். ஆதலின் உறவினரை வெகுளாமல் அவர்க்கு உறுபொருள் உதவிக் காப்ப வர்க்குப் பற்றுள்ள சுற்றத்தார் பலராவர். கொடையும் இன்சொல்லும் உடைய செல்வரைச் சுற்றத்தார், பலாப் பழத்தில் மொய்க்கும் ஈக்களைப்போல் வந்து பற்றுவர். குற்றமுடையாரெனச் சுற்றத்தாரை விலக்குவார், பற்றுக் கோடில்லாத பைங்கொடியென வாடுவர். ஆதலின், ' குணம்தாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொனல்’ என்ருர் வள்ளுவர்.