உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ. வினையும் துணையும் இன்பமான வாழ்வை இனிது நடாத்த, ஏதேனும் செயலொன்றை நாடி மேற்கொள்ள வேண்டும். நல் லனவே எண்ணி, நல்லனவே சொல்லி, நல்லனவே செய்தல் நல்லோர் கடமையாகும். இதனை வள்ளுவர் பெருமான், சான்ருேர்க்குக் கடணென்ப நல்லவையெல் லாம் என்று சொல்வி வலியுறுத்திகுர். மக்கள் பெரும்பாலும் மேற்கொள்ளும் செயல்கள் எல்லாம் செல்வத்தை ஈட்டும் நோக்குடையனவே. பொருளிட்டுதல் ஒன்றே குறியாகக் கொள்ளும் செயல்கள் அத்துணைச் சிறப்புடையனவல்ல. பொருளுடன் அறமும் புகழும் பயக்கும் செயல்களைப் போற்றி மேற்கொள்வதே பொருத்தமுடையதாகும். ஆதலின் வள்ளுவர், வினைத் தூய்மையென ஓர் அதிகாரம் வகுத்து விளக்கியருளிஞர். எந்தச் செயலேயும் இனிது செய்து முடிக்கத் துணை யாவார் சிலர் அமைய வேண்டும். சிறந்த துணைவருடன் செய்யும் செயல்கள் சீரிய பயனை விளைத்தே தீரும். அவை துரயனவாயின் செயலைப் புரிவார் சிந்தை விரும்பும் யாவும் ஒருங்கு விளையும். இதனுலேயே வளளுவா, 'துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்' என்று வகுத்தருளிஞர். வினையின் தூய்மையை விளக்க வந்த வள்ளுவர், இம்மையில் புகழும் மறுமையில் புண்ணியமும் பயவாத வினைகளை விலக்குதல் வேண்டுமென்ருர், வலுமை காரண