உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினேயுத் துணையுக் f{}} 'ஈன்ருள் பசிகாண்ப ஆயினும் செய்யற்க சான்ருேர் பழிக்கும் வினே' என்று வழங்கிய அறவுரை மிகவும் ஏற்றமுடையதாகும். உறவினர் பலருள்ளும் பேரன்புக்குரியவள் தாயேயாவள்அன்னவள் பசியால் இன்னலுறுவதைக் கானினும் அவளது பசித் துயர் போக்கவும் பழிச் செயல் புரியலாகாது என்று புகட்டிய புலவர் திறம் போற்றற்குரியதாகும். அல்லாதார் தீவினை செய்து பழியொடு பெற்ற அருஞ் செல்வத்தினும் பழியின்றி நல்லோர் அனுபவிக்கும் நல் குரவே உயர்ந்ததாகும். செல்வத்தைப் பெறக் கருதிச் செய்யும் தீயவினைகள் பெரும்பாலும் முற்றுப் பெறுதலோ வெற்றி விசேத்தலோ அரிது. அவை ஒரு வகையால் நிறைவேறினும் பின்னர்ப் பேருந்துன்பத்தையே கொடுக்கும். ஒருவன், பிறக் உள்ளம் வருந்தி இசங்கக் கவர்ந்த செல்வமெல்லாம் இம்மையிலேயே அவன் வருந்தி இரங்குமாறு அகலும். து.ாய வினையால் துன்னிய பொருள்களை ஒருவன், முன்னர் இழந்தாளுயினும் பின்னர் வந்து பெரும்பயன் விளக்கும். பிறரை வஞ்சித்து ஈட்டிய செல்வத்தைப் பெருங்காவல் செய்தாலும் ஒருங்கே அழிந்து போகும். பச்சை மண் பாண்டத்தில் ஊற்றி வைத்த நீர், பாண்டத்தையும் சிதைத்துத் தானும் பாழாகும். அதுபோலவே தீச்செய லால் தேடிய செல்வம் தேட்டானனையும் கெடுத்துத் தானும் கெட்டொழியும் என்று கட்டுரைத்தார் வள்ளுவர். சேலத்தால் பொருள்செய் தேமார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ பற்று' என்பது அவரது சொல்லமுதம் ஆகும்.