பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 வன்ஞவர் சொல்லமுதம் தூய வினைகளை ஆராய்ந்து செய்ய முற்படுவார்க்கு உள்ளத் திட்பம் அமைய வேண்டும். மனத் திட்பமே வினை வெற்றியடைவதற்கு உற்ற பெருந்துணையாகும். ஆதலின் வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்' என்றே குறித்தார் திருவள்ளுவர். ஒருவற்குப் பிற துணைகள் பெருவன்மையுடையவாயினும் மனத்திண்மை இல்லையாயின் அவற்ருல் பயனில்லையென்பார் வள்ளுவர். பிறர் அறியாத வகையில் செயலைச் செய்து முடிப்பவனே சிறந்த மனத்திட்ப முடையவன். செயல் முடிவதற்கு முன்பே, இடையில் பிறர் அறியுமாறு செயல்புரிவான் நீங்காத துன்பத்திற்கு ஆளாவான். வினை முடிவிற்கு இடையில் ஏற்படும் இன்னல்கட்கு உள்ளம் கலங்காது உறுதியுடன் செயல் புரிவார், தாம் நினைத்த பயன்கள் அனைத்தும் நினைத்தவாறே அடைந்து இன்புறுவர் என்ருர் திருவள்ளுவர். 'எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்' என்பது அவரது சொல்லமுதமாகும். உடலுழைப்பால் முதலில் உறுதுயர் வருமாயினும் அதுநோக்கி உள்ளத் தளரக் கூடாது. முடிவின்கண் இன்பந்தரும் வினையைத் துணிவுடன் செய்து முடித்தல் வேண்டும். அத்தகைய வினைத் திட்பமுடையவரையே உலகம் வியந்து போற்றும் என்று உரைத் தருனிஞர் வள்ளுவர். வினை செய்யத் தொடங்குமூன். இது தப்பாது என்னும் துணிவினைப் பெறும்வரை ஆராயவேண்டும். துணிந்த பின்னும் எண்ணிக்கொண்டிருப்பது இழுக்கைத் தரும். துணிவு பெற்ற வினை, காலத்தாழ்வினுல் அழி வெய்துமென்பார் வள்ளுவள், காலம் நீட்டித்துச் செய்யத்