பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினேயும் துணேயும் £63 தகுந்த வினைகளே அவ்விதமே செய்யலாம். காலம் தாழ்க் காது விரைந்து முடிக்கத் தகுந்த வினைகளே முனைந்து முடித்தலும் வேண்டும். ஒருவன் வினை செய்யுங்கால் பொருள், கருவி, காலம், வினை, இடம் என்ற ஐந்தினையும் தெளிவுற ஆராய்ந்து செய்தல் வேண்டும். வினையை முடித்தற்கு வேண்டிய முயற்சியும், அதற்கு வரும் இடையூறும், அதனை விளக்கி முடித்தால் விளேயும் பெரும் பயனும் தெளிவுறத் தெரிதல் வேண்டும். இங்ஙனம் பல்வகையானும் எண்ணித் துணியும் வினைக்குத் துணையாக நிற்பவரும் சிலர் வேண்டும். அன்னவர் இயல்புகளைப் பெரியாரைத் துணைக் கோடல் என்ற பகுதியில் பேசுகின்ருர் பெருநாவலர். வினை செய்யத் துணையாவார் காமம், வெகுளி, கடும் பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என்னும் மூவிரு குற்றங்களும் முறைமையின் நீக்கியவராக இருத்தல் வேண்டும். உலோபத்தையே கடும்பற்றுள்ளம் என்றும் இவறன்மை என்றும் குறிப்பர். மாண்பிறந்த மானமே குற்றமாகக் கொள்ளப்படும். வரம்பிகந்த உவகையே பெருங்குற்றமெனப் பேசலுறும். இத்தகைய அறுவகைக் குற்றத்தின் நீங்கிய பெரியாரையே துணையாகப் பெறுதல் வேண்டும். அன்னர் அறத்தின் சிறப்பை அறிந்தவராக வும் பருவ முதிர்ச்சியுடையவராகவும் விளங்கவேண்டும். தெய்வத்தாலும் பிற மக்களாலும் ஏற்படும் துன்பங்களை நீக்கும் வகையினைத் தெரிந்து நீக்குதல் வேண்டும். பின்னர் அன்ன துன்பங்கள் வாராவண்ணம் முன்னறிந்து காக்கவல்ல திறமையுடையராய் இருத்தல் வேண்டும். அத்தகைய பெரியாரை ஒருவன் துணையாகப் பெற்ருல் அதுவே அரிய பேருக மதிக்கப்படும் வன்மையுள் எல்லாம் தலையாகவும் அமையும் .