இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
#): வள்ளுணர் சோல்லமுதம் தக்காரைத் தனது இனத்தவராகப் பெற்றவனப் பகைவர் யாதும் செய்ய முடியாது. துணையாக நின்று தூய வழிகாட்டும் நல்லோரைப் பெருதவன் பகைவர் இல்லையாயினும் தானே அழிவான். முதற்பொருள் சிறிதும் இல்லாத வணிக்ர்க்கு அதளுல் வரும் ஊதியமும் இல்லை. அதுபோலவே வினை செய்யும் ஒருவற்கு விளையும் இடையூற்றைத் தாங்கும் தக்கார் துணை இல்லையாயின், அவ்வினை வெற்றியுறுவதில்லை. ஆதலின் அனைவரும் பெரியார் துணையைப் பேணிக் கொள்ளுக; இன்றேல் ஒருவன் தான் தனியணுயிருக்கப் பலரோடும் பகை கொள்ளுதலேப் போன்று பதின்மடங்குத் தீமை பல்கும் என்று அறிவுறுத்தினர் திருவள்ளுவர். 'பல்லார் பகைகொனலின் பத்தடுத்த தீமைத்தே நல்ஜைத் தொடர்கை விடில் என்பது அவரது சொல்லமுதம் ஆகும்.