உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடும் அரசுக் 9 என்ற பகுதியிலும் விளக்கமாக இருபத்தைந்து அதிகாரங் களைக் கொண்ட அரசியல் என்ற பெரும்பகுதியிலுக் அழகுறத் தொகுத்தும் வகுத்தும் சொல்லியுள்ளார். மக்களுடைய இன்ப வாழ்வுக்கு மன்னன் இன்றியமை யாதவன் என்ற உண்மைைைய வலியுறுத்த விரும்பிய வள்ளுவர் பொருட்பாலில் முதலிலேயே மன்னன் மாண் பைக் குறிப்பிட்டு விடுகிருர், இறைமாட்சி என்று அமைத்த தலைப்பிலேயே அரசன் எத்தகைய இயல்பின ஒய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தைப் புலப்படுத்தும் பொய்யில் புலவரின் புலமைத்திறம் நம்மால் அளவிட லாகுமோ ! எங்கும் நிறைந்து தங்கிய எல்லாம் வல்ல ஈசனேயும் இறை என்பர் ஆன்ருேர், தனது செங்கோன்மைச் சிறப் பால் மக்கள் சிந்தையெல்லாம் என்றும் மங்காது தங்குக் பெருமையுற்ற மன்னனையும் இறை என்று குறிப்பர். என்றும் நீங்காது தங்கும் நல்லியல்பே இறை என்று சொல்லப்படும். அவ்வியல்புடையானே இறைவளுவன். எங்கும் நிறைந்த ஈசனே கண் காளுத்தெய்வம்; மக்களின் மனங் கவர்ந்த மன்னகுே கண்கண்ட தெய்வம். திரு வுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டதற்கு ஒப் பாகும்’ என்று நம்மாழ்வார் அருளிச்செய்தனர். 'எல் லோர்க்கும் தெய்வம் இலேமுகப் பைம்பூண் இறை' என் பார் குமரகுருபரர். இங்ஙனம் இறைவனது கூருக நின்று நாட்டைக் காக்கும் அரசனுக்கு நல்லியல்புகள் பல அமையவேண்டும். அவன் அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு என்னும் ஆறு அங்கங்களையும் குறைவறப் பெற்றிருக்க வேண்டும். இவ் ஆறனுள் ஒன்றிரண்டு குறையினும் இழுக்கில்லை. எனினும் இவ் ஆறும் இனிது அமையம்