பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டும் அாகம் தி மீதும் வாளினை ஒச்சான். இவைபோன்ற உண்மை வீரனது திண்மையான செயல்களே மறனிழுக்க மான மெனப் பேணப்படும். இதனையே பேராண்மை என்றும் கூறுவர் பெருநாவலர். அரசன் தனக்குப் பொருள்கள் வரும் வழிகளே மேன்மேலும் பெருக்கவேண்டும். பலதுளிப் பெரு வெள்ளமாகப் பல்வேறு வழிகளில் வந்து குவித்த செல் வத்தை ஓரிடத்தே தொகுத்துவைக்கவேண்டும். அதனைப் பகைவர், கள்வர் முதலான பிறர் கவர்ந்து கொன் ளாமல் காக்கவேண்டும். அதனை அறம்பொருன் இன்பங் களின் பொருட்டுச் செலவிடவேண்டும், இச் செயல் களில் அரசன் சிறந்த வல்லமை படைத்தவனுய் இருக்க வேண்டும். 'இயந்தலும் ஈட்டிலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரக' என்பது வள்ளுவர் சொல்லமுதமாகும். பகைவரை அழிப்பதாலும், பிற நாடுகளைத் தன் னடிப் படுத்துத் திறை கொள்வதாலும், தனது நாட்டைத் தலையளி செய்து காத்தலாலும் அரசனுக்கு திதிக்களஞ் சியம் நிரம்புவதாகும். தனது களஞ்சியத்தைப் பொன் குலும் மணியாலும் நிரப்பிய மன்னன் அவற்றைக் கொண்டு கடவுளர்க்கு விழவெடுத்தல் வேண்டும். அந்: தணர்க்கும் வறியோர்க்கும் அருளுடன் வழங்கவேண்டும். இவ்வகையில் செலவிடவே அறத்தின் பொருட்டுச் செல. வழிப்பாகும். படைவலியைப் பெருக்குதற்கும் பகை வருடன் சேர்வாரைத் தடுப்பதற்கும் தன்னை விட்டுப் பிரிவாரைக் கூட்டுதற்கும், செலவு செய்யவேண்டும். இவ் வகையான செலவுகள் பொருளின் பொருட்டுச் செலவழிப்