பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடும் அசகம் 星安 பொறுக்க முடியவில்லையாயினும் நசட்டின் நலன் கருதி அவற்றைப் பொறுத்துக் கேட்டல் அரசனது கடமை யாகும். அத்தகைய கடமை உணர்ச்சியுடைய அரசனது கவிகை நீழலில் உலகம் என்றும் தவிராது தங்கும். வேண்டுவார்க்கு வேண்டுவன விரும்பிக் கொடுத்தல், எல்லோர்க்கும் இன்னருள் செய்தல், நீதியான ஆட்சியை நிலவுமாறு செய்தல், தளர்ந்த குடிகளைத் தாங்குதல் ஆகிய இந் தான்கு செயல்களும் உடைய அரசன், வேந் தர்க்கெல்லாம் வழிகாட்டும் ஒளிமிகு விளக்காய்த் திகழ்வான். இத்தகைய வேந்தனுக்குச் சென்ற சென்ற பேரர் களில் எல்லாம் வென்றி விளைப்பது அவனது வேலன்று; செங்கோலே சிறந்த வெற்றியை விளப்பதாகும் என்று. உரைப்பார் திருவள்ளுவர். “வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலது உம் கேது. தெனின் என்பது அவர் சொல்லமுதமாகும். இக் கருத்தைச் சங்கத் மிழ்ச் சான்ருேர் ஒருவர் நன்கு வலியுறுத்துவார். அரசன் இால்வகைப் படைகளும் மிகுதியாக உடையவனு. ಮ್ಲೇ அவனது வெற்றி அறநெறியையே முதலாகக் கொண்டது என்று மொழிந்தருளிசூர் அப் புலவர். "கடுஞ்சினத்த கொல்களிலும் கதழ்பரிய கலிமாவும் நெடுங்கொடிய நிமித்தேரும் நெஞ்சுடைய புகன்மறவருமென நான்குடன் காண்க. தாவீனும் மாண்க அறநெறி முதந்தே அரசின் கொற்றம்' என்பது அப் புலவரது பொருண்மொழியாகும்.