பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவும் உணர்வும் f? உழவுத்தொழில் தோன்றிய காலத்தை அறுதியிட்டு உரைக்க முடியாது. நாட்டிற்கு உயிர்தாடியாக விளங்குவது உழவுத் தொழிலே என்பதை வலியுறுத்த, வள்ளுவர் பெருமான் நாட்டின் இலக்கணம் தவில வந்த தொடக்கத்திலேயே, 'தன்னா விளையுளும் தக்காரும் தாழ்விசைச் செல்வரும் சேர்வது நாடு’ என்று வகுத்தருளிஞர். என்றும் குன்ருத விளச்சல் இன்றியமையாதது என்பதைத் தள்ளா விளேயுள்' என்ற தொடரால் குறித்தார். அத்தகைய விளைச்சலைத் தரும் பயிர்த்தொழில் உழவு என்ற ஒரதிகாரத்தால் விளக்கினர். பயிர்த்தொழிலின் நுட்பங்களையெல்லாம் திட்பமுத விளக்கும் திருவள்ளுவர் வேளாணரே என்று கற்பவர் வியக்குமாறு உரைக்கிரு.ர். மக்கள் பொருளீட்டுதற்கு உழவேயன்றிப் பிற தொழில்களையும் மேற்கொள்ளுகின்றனர். எனினும் உணவுப் பொருளைப் பெறுதற்கு உழவரிடமே செல்ல வேண்டும். ஆதலின் ஏர்ப்பின்னது உலகம்’ என்று இயம்பினர் வள்ளுவர். மெய்வருந்தி உழைப்பவரே உழவை மேற்கொள்ளலாம். அத் தொழிலால் எத்துணை வருத்தம் எய்திசூலும் எல்லோரும் அதன் பயனையே எதிர்நோக்கி இருப்பராதலின் உழவே தலையாய தொழில் என்று மொழிந்தருளினர். தமிழ் மூதாட்டியாராகிய ஒளவையாரும்,

  • உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்ல்ே கண்டிர்

பழுதுண்டு வேருேர் பணிக்கு என்று உழவின் உயர்வை அறிவுறுத்தினர். வ. சொ.-H-ே