உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவுக் உயிர்வும் 33 உணவையே முதலாக உடையது உடம்பு, அவ் உணவைக் கொடுப்பவர் உயிர் கொடுப்பவராவர். உணவால் உயிரளிக்கும் உழவர்க்கு வேண்டிய உதவி களைச் செய்து உழவினை வளர்க்க வேண்டும் என்று: பாண்டியனுக்கு அறிவுரை பகர்ந்தார். நீரின் நடிை யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே என்பது அப் புலவரது பொன்மொழியாகும். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடிய வெள்ளேக்குடி நகளுர் அவனுக்கு உழவின் உயர்வைப் பற்றிய நல்லுரைகள் பல சொல்லியருளிளுர், பகைவரை எதிர்த்துப் போர் செய்யும் படைதரும் வெற்றி யெல்லாம் உழவால் விளைந்த பயனேயாகும். ஆதலின் உழவர் குடியை இனிது காப்பாயாக. அக் காவலால் ஏனைக் குடிகளையும் காத்தவனுவாய். அதனுல் நின் பகைவர் நினது அடியைப் போற்றி நிற்பர். இங்ங்னம் அறிவுறுத்திய நாகசூரது நன்மொழி உழவின் உயர்வை அழகுற விளக்கிய தன்ருே ! 'வருபடை தாங்கிப் பெயர் புறத் தார்த்துப் பொருபடை, தரூஉம் கொத்தமும் உருபவை. ஊன்றுசல் மருங்கின் ஈன்றதன் பயனே பகடுபுறங் தருநர் பாரம் ஓம்பிக் குடிபுறத் தருகுவை யாயின்நின் அடிபுறத் தருகுவர் அடங்க தோதே." என்பது வெள்ளைக்குடி நாகஞரின் தெள்ளிய பாடலடி களாகும்.