பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவையும் ஆதிறலும் 35 வின் பத்தில் மேன்மேலும் ஆழ்ந்து மூழ்கும் ஆர்வமுடை யார்க்குச் சொல்லாற்றல் இன்றியமையாததாகும். கற். றறிந்தார், தம் நாவன்மையால் மற்றவர்க்கு உயர்ந்த நூற்பொருள்களை உரைக்குங்கால் மிகுந்த உவகை யடைவர். அவரது அகமகிழ்ச்சியை முகமலர்ச்சியாலும் புகழுரையாலும் அறிந்து இன்புற்ற அக் கற்ருர், மேலும் சிறந்த நூலினைப் பயிலவேண்டும் என்று முயல்வார். அம் முயற்சியால் கல்வியின்பத்தைக் காண்பர். “தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்’ என்பது வள்ளுவர் சொல்லமுதமன்ருே ! கல்வியாளர் தம் கலேயின்பத்தைப் பெருக்கவும் கல்ே ஞானத்தை வளர்க்கவும் சொல்லாற்றல் ஏற்ற துணைபுரி கின்றது. அத்தகைய சொல்வன்மையைப் பெருக்கு தற்கு நல்லவையே நல்வாய்ப்பு அளிப்பது. கலைச்சுவை கண்ட நல்லோரே கலேவல்ல புலவரைக் காண மகிழ்வர். அழகிய தாமரைத் தடாகத்தையே அன்னப் பறவைகள் விரும்பி அடையும், அஃதே போல் கற்ருரைக்கற்ருரே காமுறுவர்' என்று கட்டுரைப்பார் தமிழ் மூதாட்டியார். இழிந்த காக்கை இடுகாட்டில் கிடக்கும் பிணத்தையே விரும்பும். அஃதே போல் கல்வியறிவில்லாத மூர்க்கரை மூர்க்கரே விரும்புவர் என்பார். நல்லவையுள் புக்கு உரையாடும் இன்பம் எல்லேயற்ற தாகும். வானுலக இன்பத்தினும் அது மேலானதாகும் என்பர் ஒரு சமணமுனிவர். வானுலக இன்பம் அதனினும் வளமானது என்பார் உளராயின் அதைப்பற்றி இம்மையில் கவலையுறத் தேவையில்லே ; மறுமையில் பார்த்துக் கொள்ளலாம் என்று மறுத்துரைப்பார் அம் முனிவர்.