உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவையும் ஆற்றலும் 37" களின் தகுதி அறிந்து கருத்துகளை ஆராய்ந்து வழங்க வேண்டும். அவையினர்க்குப் பெருமையளித்து அடங்கி நின்று பேசுதல் வேண்டும். இவை போன்ற கருத்து களே யெல்லாம் தொகுத்து அவையறிதல்' என்ற அதி காரத்தில் புகுத்துரைப்பார் நம் பொய்வில் புலவர். அவைக்கண் ஒன்றைச் சொல்லப் புகுவார் சொற். களின் இயல்பையெல்லாம் இனிது உணர்ந்திருக்க வேண்டும். தாம் சொல்லப் புகும் அவையின் தகுதியாகிய மிகுதி, ஒப்பு, தாழ்வுகளை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். இவ் ஆவைக்கண் சொல்லும் சொற்கள் எத் தகையனவாய் இருந்தால் ஏற்றுக் கொள்ளப் பெலும் என்பதை அறிந்து பேசுதல் வேண்டும். அச் சோற்களே. வழுப்படாமல் மிகவும் தேர்ந்து கூறவேண்டும். அவை: வினர் தகுதியை அளந்தறியாது ஒரு பொருளை விரித் துரைப்பார் சொல்லும் ஆகைய நியாச் சிறியதாவர். அவர்கள் எத்துணை நூல்களைக் கற்றவசாயினும் அறி வந்த மூடரே. ஆதலின் அறிவு திறைந்த சான்ருேச் அவைக்கண் ஆன் றமைந்த நுண்ணிய பொருள்கனை پسعی எண்ணியுரைத்துப் பேரறிவானரெனப் பெருமை வெய்துக; சிற்றறிவுடையார் குழாத்துள் சென்று ஒன்று சொல்லுங் கால் தாமும் அன்னவர்க் கேற்ப எளிய பொருள்களே எடுத்துரைத்து அவரானும் ஏத்துப் பெறுக ; இதுவே சொல்வன்மை மிக்க நல்லறிவாளர்க்கு ஒல்லும் செய லாகும் என்று எடுத்துரைத்தான் வள்ளுவர். தம்மினும் மிக்க பேரறிஞர் கூடிய பேரவைக்கண் புக்கார் அவர்களின் முற்பட்டு ஒன்றனச் சொல்லுதல் தகாது. ஆங்கு அடக்கமுடையதாய் தடக்கவேண்டும். அச் செயல் தற்குணங்கள் அனைத்தினும் சிறந்த நற்குண மாக மதிக்கப்படும்.