பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவையும் ஆற்றலும் 3。 பினை விரும்புமாறு செய்யும் வியத்தகுகுணங்கள் அச்சொல் லில் அமையவேண்டும். இனிக் கற்ருர், கல்லாச் ஆகிய எல்லோரையும் வயப்படுத்தும் வல்லமை அச் சொல்லிற்கு இருத்தல் வேண்டும். வழுவின்மை, சுருக்கம், விளக்கம், இனிமை, விழுப்பயன் தரும் தன்மை முதலாய நற் பண்புகள் அமைந்த சொல்லே சிறந்த நாவலன் வாய்ப் பிறக்க வேண்டும். இத்தகைய பண்புகள் நிறைந்த பண்பட்ட சொற்களைப் பேசுவதே சிறந்த நாவன்மைக்கு இலக்கணமாகும் என்பார் திருவள்ளுவர். இக் கருத்துகனை எல்லாம் தன்னுள் கொண்டு திகழும், கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளsரும் வேட்ப மொழிவதாம் சொல்' w என்ற திருக்குறள் எண்ணுத்தொறும் இன்பந்தரும் தெள்ளமுதமாகும். அவையிடைத் தமது தாவன்மை தோன்ற நயம்படப் பேசும் நாவலர் தம் குடிப்பிறப்பு. கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் ஆகியவற்ருல் அமையும் தகுதிக்கேற்பச் சொற்களே ஆய்ந்து சொல்லுதல் வேண்டும். அவையினருடைய தகுதி வேறுபாடுகளையும் உணர்ந்து உரை வழங்குதல்வேண்டும். அங்கணம் ஆராய்ந்து பேசும் அருஞ்செயல் சிறந்த பொருளும் புண்ணியமுமாக எண்ணப்படும். நாவல்லார் தாம் சொல்லக் கருதிய சொல்லே வெல்ல வல்லதொரு சொல் இல்லாத வகையில் தெள்ளத் தெளிந்து சொல்ல வேண்டும். தம் சொல்லேக் கேட்டார், பின்னும் பலகால் கேட்க விரும்புமாறு சொல்லவேண்டும். தாம் பிறர் பேசும் சொற்களைக் கேட்க நேர்ந்தால் அவரது சொல்லின் பயனை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் .