அணையும் ஆற்றலும் #7 எடுத்துரைப்பான். இத்தகைய நலத்தொடு பேசும் நாவலன் ஏவலை உலகம் தலைமேல் தாங்கி விரைந்து செய்ய முனைந்து நிற்கும் என்று மொழிந்தருளினர் திருவள்ளுவர். விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் கிரந்தினிது சொல்லுதல் வல்லதுர்ப் பெதின்’ என்பது அவர் சொல்லமுதமாகும். அன்னவர் சிலவாய சொற்களில் பலவாய பொருள்களே விளக்குவர். ஒன்றை விரைந்து உரைக்க மாட்டார். சொன்னவற்றையே பின்னும் பின்னும் பன்னி உரையார். பொய்யாய கருத்து களைப் புகலார். ஒரே பொருளைப் பெரிதும் விரித் துரையார். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பர். இங்ங்னம் சிறந்த நாவலர்க்கு இலக்கணம் வகுத்தது ஆசாரக்கோவை : விரைந்துரையார் மேன்மேல் உரையாச்பொய் ய5வ பரந்துரையார் பாரித் துரையார்-ஒருங்கெனத்தும் சில்லெழுத்தி ஓனே பொருளடங்கக் காலத்தால் சொல்லுக சேவ்வி அறிந்து' என்பது பெருவாயின் முள்ளியாது அருமைப் பாடலாகும். சொல்வன்மையின் இன்றியமையாமையையும் அதன் சிறப்பையும் குறிப்பிட வந்த குமரகுருபரர், எத்தனை நூல்களேக் கற்றுனர்ந்தாலும் அவையின் தகுதியறியும் அறிவு, ஒருவற்கு இல்லையெனிற் கற்ற கல்வியால் பயனில்லை ; அவையின் தகுதியறியும் ஆற்றலுடன் கற்ற வற்றை அஞ்சாது எடுத்துரைக்கும் செஞ்சொல் திறம் இனிது அமையவேண்டும் , அஃதும் அமையுமாயின் பொன் குல் செய்த மலர் புது மணம் பெற்றுக் கமழ்வதற்கு ஒப்பாகும் என்று உரைத்திருனிகுச்.
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/43
Appearance