உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வள்ளுச்ை சொல்லமுதிக் 'சொல்வன்மை இன்றெனின் என்னும் அஃதுண்டேன் பொன்மர் காற்றம் உடைத்து' என்பது அவரது திருவாக்கு. க. இன்பமும் துன்பமும் இன்பத்தை விரும்பாத மனிதன் யார்? இம்மை விலும் மறுமையிலும் எல்லோரும் இன்பத்தைப் பெறவே. விரும்புகின்றனர். ஆளுல், இறைவன் வகுத்த வகையா லன்றிக் கோடிக்கணக்கான செல்வத்தைத் தொகுத்தவ, ராயினும் இன்பம் துய்த்தல் அரிதாகும். அதனுலேயே நக்கீரர், துய்ப்பேம் எனினே தப்புத பலவே' என்று நவின்றருளிஞர். சிலர் கண்ணுக்கினிய காட்சிகளைக் காண்பதில் கழிபேரின்பம் அடைவர். சிலர் சிந்தைக்கும் செவிக்கும் இனிய இன்னிசைகளைக் கேட்பதில் இன்பம் காண்பர். சிலர் சுவை மிகுந்த உணவுகளை உட்கொள்வதில் உள்ளுவகை கொள்ளுவர். சிலர் நறுமணப் பொருள்களே துகர்வதில் நல்லின்பம் காண்பர். சிலர் பொன்னும் மணியும் பூணுவதிலும் பொற்புறும் பட்டாடைகளைப் புனைவதிலும் தனியின்பம் காண்பர். இங்ங்ணம் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புல இன்பங் களுக்கும் ஆசைப்படாத மக்களே இலர். ஒன்றை இன்பமென உணர்வதும் மற்ருென்றைத் துன்பமென வெறுப்பதும் உள்ளத்துக் கொள்வதோர் கொள்கையே அன்றிப் பிறிதில்லை யென்பர் அறிஞர். ஒருவற்கு இன்பமெனப்படுவது மற்ருெருவற்குத் துன்ப;