பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பமும் துன்பமும் 4: அக் கலைமகள் நியமத்தில் குடிகொண்ட சித்தா தேவியைச் சிந்தையுருகப் பணிந்து வேண்டிஞன். அக் கலைத் தெய்வம் தன்னைப் பணிந்த ஆபுத்திரனுக்கு, 'வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது தான்தெலே வில்லாத் தகைமைபது' ஆகிய அமுதசுரபி என்னும் தெய்வப் பாத்திரத்தை அருளொடு வழங்கியது. அதனைப்பெற்ற ஆபுத்திரன் அதனின்று சுரந்த உணவைத் தன்பால் அன்புடன் வந்தவர்க்கு ஊட்டிச் சிந்தை மகிழ்ந்தான். அன்று முதல் ஆபுத்திரன் வீதியில் சென்று பிச்சை ஏற்பதில்லை, அமுதசுரபியினின்று சுரக்கும் அமுதனய உணவை அடைந்தார்க்கெல்லாம் அகமகிழ ஊட்டித் தானும் தனி மகிழ்வுற்ருன். ஆபுத்திரன் அறச்செயலே உணர்ந்த தேவர்கோன் அவனுக்கு வரமருள வானகம் நீங்கி மதுரையைச் சார்ந் தான். ஆபுத்திரனைக் கண்டு, நினது அறச்செயலை வியந்து பாராட்டிளுேம் , தினக்கு வேண்டும் வரத்தைக் கேட்க மகிழ்வுடன் வழங்குவோம்’ என்று இயம்பிஞன். அதற்கு மறுமொழி பகர்ந்த ஆபுத்திரன், 'வருந்தி வந்தோர் அரும்பசி கனேந்தவர் திருந்து மூகக்காட்டும் இத்தெய்வக் கடிஞை' என்பால் இருக்கிறது. இதல்ை வறியவர்க்கு வயிருர ஊட்டுகிறேன். அவர்கள் அகமும் முகமும் மலர்ந்த அரிய காட்சியைக் காணுகிறேன். அதனுல் அணவிலாத இன்பத்தை அடைகிறேன். இதற்கு மேலான இன்பம் வேறென்ன இருக்கிறது ? இந்திரனே! நீ எனக்கு என்ன வழங்க இருக்கிருய்? உண்டியோ ? உடையோ ? பெண்டிரோ ? ஒன்றும் எனக்கு வேண்டுவதில்லை'