இன்பமும் துன்பமும் 43: எத்துணைத் துன்பம் எய்துவான் ! அத்தகைய துன்பம் அடையாதவண்ணம் நாம் இறந்துவிடவேண்டும். நமது இறப்பை அறிந்தாளுயின், வள்ளல் உயிரோடுஇருந்தால் நம் வறுமையை ஒழித்திருப்பான், அவனே இறந்துவிட் டான்' என்று எண்ணியாவது ஒருவாறு உளந்தேறிச் சிெல்வான்' என்று பலவாறு நினைந்தார். பொழுது புலர் வதற்கு முன்னர்த் தமது மனையகம் புகுந்தார். தமது உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பி, வீட்டுத் தோட்டத்தி லுள்ள பாம்புப் புற்றினுள் கையை விட்டார். ஆங்கிருந்த விடநாகம் காளத்தி வள்ளலின் கரத்தைக் கண்டதும் தனது மணியைக் கக்கியது. கையில் நாகமணியைக் கண்ட வள்ளல் மீண்டும் மனையுட் புகுந்தார். தம்மை தாடிப் பாடிவந்த புலவனுக்கு நாகமணியையே பரிசிலாக வழங்கி மகிழ்ந்தார். அவ் வள்ளல் தமது ஈகையறத் திற்குத் தடையாக வறுமை வந்தபோது சாதலே இன்ப மென எண்ணிஞர். துறவறத்தில் நிற்பார்க்கு ஆசைகள் அறவே ஒழிய வேண்டும். இன்றேல் அவை துன்பத்துள் துன்பமாகப் பெருந்துயர் விளக்கும். அவ் ஆசைகள் முற்றும் அற்று: விட்டால் மறுமையில் மட்டுமன்றி இம்மையிலும் இன்பம் இடையருது பெருகும் என்ருர் பெருநாவலர். 'இன்பம் இடையரு தீண்டும் அவசவென்னும் துன்பத்துன் துன்பம் கெடின் என்பது அவரது சொல்லமுதம் ஆகும். உள்ளத்திற்கு இனிப்பது உயர்ந்த கல்வியாகும். சிறந்த நூல்களை ஆராய்ந்து கற்கக் கற்க அளவிலாத இன்பம் வினையும். நவில்தொறும் நூல் நயம் என்ப. தன்ருே வள்ளுவர் சொல்லமுதம்! இறைவனது திரு.
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/49
Appearance