பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வமும் கல்குரவும் 5潭 வார்க்குச் சிறு பொருளே போதுமானது என்ற கருத்தை :பும் புலப்படுத்துகிருர் எண்பொருள் என்ற தொடர் எளிய பொருள் என்று மட்டும் பொருள்பட்டதில்லை; எண்ணத்தக்க பொருள் என்றும் பொருள்பட்டது. பெருத்த செல்வம் படைத்தவரே அறத்தையும் இன்பத் தையும் பற்றி எண்ணுவதில் பயனுண்டு. அவர்கள் எண்ணுவராயின் எளிதில் முடிவன என்ற கருத்தெல்லாம் அமைய அத் தொடரை அமைத்தார் வள்ளுவர். ஒருவனைப் பெருமையுடையவ ளுக்குவது செல்வமே, ஒரு பொருளாக மதிக்கத் தகாதவனையும் மற்றவர் மதிக்கு மாறு செய்யும் வல்லமை இச் செல்வத்திற்கு உண்டு. பொருளல் வரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்' என்பது வள்ளுவர் சொல்லமுதம் ஆகும். கல்வி இல்லாத கசடணுக இருந்தாலும் கைப்பொருள் உடைய வணுயின் எல்லோரும் சென்று அவனை எதிர்கொண்டு வரவேற்பர். பொருள் இல்லாத ஏழைமகனை மணந்து கொண்ட மனைவியும் விரும்பாள். அவனைப் பெற்ற அன்னையும் வெதுப்பாள். அவனது வாய்ச்சொல்லை எவரும் மதியார். ஏழை சொல் அம்பலம் ஏருது' என் பு தன்ருே பழமொழி? செல்வமில்லாதவன் எய்தும் சிறுமை களே எல்லாம் ஒருங்கு சொல்லப் புகுந்த வள்ளுவர் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார். 'இல்லாரை எல்லாரும் என்ஞவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு' என்பதன்ருே அவரது வாய்மொழி ? பெற்ருேரும் உற்ருேரும் மற்ருேரும் மனைவியும் மக்களும் ஆகிய அனேவரும் பொருள் இல்லாதவனே இகழ்வர் என்ற