பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔@ கள்ளுவச் சொல்லமுதம் கருத்தை எல்லாரும்' என்ற ஒரு சொல்லால் குறித்த வள்ளுவர் திறம் வியத் தற்குரியதாகும். கல்லானே யானுலும் கைப்பொருளொன் ஆண்டாவின் எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர்-இல்லானே இல்லகளும் வேண்ட்சன்டிற் றீன்றெடுத்த தாய்வேண்டான் செல்ல தவன்வாயிற் சொல்' - என்பது தமிழ் மூதாட்டியார் காட்டும் நல்வழியாகும். பொருளுடையாரைப் புகழாதார் இல்லே' என்றே மொழிவார் முன்றுறையரைகளுர், கைத்துடையான் கற்கீழ் ஒதுங்கும் கடல்ஞாலம்’ என்று கட்டுரைப்பார் குமரகுருபரர். வெற்றியும் மேன்மையும் கல்வியும் கட்டழகும் சுற்றமும் நட்பும் குலமும் நலமும் ஆகிய எல்லாம் செல்வத்தால் ஏற்படுவனவே. பணம், பெரி யோர் பந்திவில் சென்று குந்துமாறு செய்யும். பண மில்லாத குலம் குப்பையிலன்ருே தள்ளப்படும் பணம் இல்லாதவன் பிணம் என்றன்ருே இகழப்படுவான்? ஒருவனது புகழை உலகெலாம் பரப்பும் தந்தா விளக்கு, இன்னெறியில் தேடிய செல்வமே. அச் செல்வம் தன்னைப் பெற்றவர்க்கு அவர் எண்ணிய சேய்மை நாட்டிலும் சென்று பகை இருளைக் கெடுக்கும்; வெற்றி ஒளியை வீசும், அவர் செய்கின்ற வினேவனைத்தும் சிறப் பாகவே முடியும், அன்னவர் மலைமேல் ஏறி நின்று யானைப் போரைக் காண்பவர்க்கு ஒப்பாவர் என்பார் ஒப்பில் புலவர். 'சூன்றேறி யனைப்போர் கண்டற்ருல் தன்கைத்தென்து, உண்டிாகச் செய்வுசன் வினே' என்பது அவரது சொல்லமுதம் ஆகும்.