உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎会 வள்ளுவர் செல்லமுதம் அதைப்போன்று கூரிய படைக்கலம் வேருென்றில்லை என்று கூறியருளினர் வள்ளுவர். செய்க பொருளைச் செறுகச் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்' என்பது அவரது சொல்லமுதம் ஆகும், 'ஈட்டி எட்டின மட்டுமே பாயும்; பணம் பாதாள மட்டும் பாயும் என்பது செல்வத்தின் பேராற்றலே. விளக்கும் பழமொழியாகும். எல்லா வல்லமையும் படைத்த செல்வம் என்றும் ஒருவன்பால் நின்று நிலேத்திருப்ப தன்று, நிலையாமையற்றிப் பேசவந்த பெருநாவலர் செல்வத்தின் நிலேயாமையினை இரு பாவான் விளக்கியரு ளிஞர். ஒருவனது நல்வினை காரணமாகப் பல்வகையால் செல்வம் வந்து சேர்கின்றது. அந் நல்வினை முடிந்தவழிச் செல்வமும் அவனைத் தணத்துவிடுவது இயல்பு. இதனைத் திருவள்ளுவர் உவமை வாயிலாக விளக்குத்திறம் வியப் பைத் தருவதாகும். நாடக அரங்கத்தில் நடைபெறும் நாடகத்தைக் கண்டு மகிழப் பல்வேறு இடங்களி னின்றும் பல்வேறு நிலையினராகிய மக்கள் பெருந்: திரளாக வந்து கூடுகின்றனர். அதுபோலவே ஒரு வனது பல்வேறு திறப்பட்ட நல்வினைகட்கு ஏற்பப் பல்வகையான செல்வங்கள் வந்து அவன்பால் குவி கின்றன. பொன்னும் மணியும், மாடும் மனையும், நில மும் புலமும், பதவியும் பாராட்டும் ஆகிய பல்வகைச் செல்வங்கள் தாமே வந்து பற்றுகின்றன. நாடகம் முடித்தி, அப்பொழுதே, நாடி வந்த மக்கட் கூட்டமெல் லாம் அவ்விடம் விட்டு அகலுதல் போன்றே ஒருவனது நல்வினை உலத்த அப்பொழுதே அவன் பெற்ற செல்வ. மெல்லாம் மாயமாய் மறைந்து போகும்.