பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வமும் கல்குரவும் த்தி, 'கூத்தம் ட்வைக்குழாத் தத்தே பெருஞ்செல்வம் போக்கும் அதுவினிந் தற்று' -- என்பது வள்ளுவர் சொல்லமுதம் ஆகும். இங்ங்னம் எடுத்துக்காட்டால் செல்வ நிலையாமையை வலியுறுத்திய வள்ளுவர் அதன் இயல்பே நிலையாமை தான் என்றும் குறிப்பிடுகின்ருர், அற்கா இயல்பிற்றுச் செல்வம்' என்பது அவரது வாய்மொழியாகும். நில்லாத இயல்பையுடைய செல்வத்தைப் பெற்றவன் அதனைப் பெற்றுள்ள நாளில் நிலையான அறத்தைச் செய்து நல்வினையை ஈட்டுக என்று அறிவுறுத்திஞர். செல்வம்' என்ற சொல்லே தான் ஒருவன் பால் நிலைத்திருக்கும் இயல்புடையதன்று' என்ற கருத்தைப் புலப்படுத்தி நிற்ப, தாக மகாவித்துவான் மீளுட்சிசுந்தரம் பின்ளே குறிப் பிடுவார். 'மல்லன் குலகில் தோன்றி மறைந்திடும் தும்மைவிட்டுச் செல்வமென் றுறுவ தற்குச் செல்வமென் றுரைக்கும் பேர்தன்று' என்று குசேலோபாக்கியானத்தில் குறிப்பிடும் சிறப்புக் கூர்ந்து நோக்கத்தக்கது. மக்களே ! நீவிர் தோன்றி மறையும் இயல்புடையீர் ; ஆதலின் நும்மைவிட்டு யாமும் செல்வோம் செல்வோம் ! என்று செல்வம் ஒருவனே விட்டு ள் ேத று ம் சென்றுகொண்டிருக்கிறது. இத்தகைய செல்வத்திற்கு முன்னுேச் செல்வம்' என்று பெயரமைத்த திறம் மிகவும் பொருத்தமாகும் என்று போற்றிஞர் அப் புலவர். செல்வத்தை அறநெறியில் ஈட்டுவதும் எளிதான செயலில்லை. முயன்று அசிதில் தேடிய பெரும் பொருளைக்