பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎莎 ஜன் சூஜர் சொல்லமுதம் காப்பதும் கடுந்துன்பமே. அதனைக் காப்பதில் சிறிது குறை ஏற்படினும் அழிந்து பெருந் துன்பத்தைத் தரும். ஆதலின் துன்பத்திற்கே உறைவிடமானது செல்வம் என்று நவின்றது நாலடி நன்னூல். துன்பத்திற்கு உறையுளாகிய செல்வத்தாலேயே இன்பத்தை இருமை விலும் பெற இயலும். ஆதலின் அச் செல்வம் தோன்றிய நாள் தொடங்கிப் பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புக என்று அறிவுறுத்தினர் ஆன்ருேள். "துகள்தீர் பெருஞ்செல்லம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க அகடுற பார்மட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போன வரும்’ என்பது சமண முனிவர் பொருண்மொழியாகும். எத் தகையாரிடத்தும் செல்வம் நிலத்திருப்பதில்லை; வண்டிச் சக்கரம் போன்று சுழன்றுகொண்டே வரும் இயல் புடையது என்று இயம்பிஞர். 'உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா என்று சுருக்கமாகச் சொல்லும் அதிவீர ராமர் அறவுரை மிகவும் அருமை வாய்ந்ததாகும். செல்வத்தை வெறுக்கை என்ற பெயராலும் குறிப்ப துண்டு. செல்வம் பல்வேறு பந்தங்களைத் தந்து நிற்கும். உறக்கத்தைப் பெருக்கித் தெய்வத்தை மறக்கு மாறு செய்யும். பிறவிப் பெருங்கடலுள் வீழ்த்தும். செருக்கினை வளர்க்கும். பேசும் வாயினரும் ஊமைய, சாவர். கேட்கும் செவியினரும் முழுச்செவிடராவர். காணும் ஒளியுடைய விழியினரும் குருடராய்ப் போவர். இத்தகைய பல கேடுகளைக் கொடுக்கும் இயல்பும் அச் செல்வத்திற்கு உண்டு. ஆதலின் மக்கள் அதனை விரும்புதலாகாது ; வெறுத்தலே தக்கது என்ற கருத்