{ట్టి வன்ஜர் சொல்லமுதம் மங்கல வழக்கு என்று இலக்கணம் குறிக்கும். அம் முறையில் நல்குரவு என்றசொல் மங்கலவழக்காக நின்று வறுமையைக் குறித்தது. நிரப்பு என்ற சொல்லும் மங்கல வழக்கின்பாற்பட்டதே. எல்லாம் நிறைந்திருக்கும் நிலையே நிரப்பு எனப்படும். ஒரு பொருளும் இல்லாமையை உடைய வறுமையை நிரப்பு என்னும் எதிர்மறைச் சொல் லாற் குறிப்பதும் தமிழரது சிறந்த பண்பாட்டைப் புலப் படுத்துவதாகும். இந் நல்குரவின் கொடுமையைத் திருவள்ளுவச் பத்துக் குறட்பாக்களால் விரித்துரைக்கின்ருர் ஒருவ னுக்கு வறுமையைப்போலத் துன்பம் தருவது வையத்தில் எதுவுமே இல்லை ; துன்பம் விளைப்பதில் வறுமைக்கு ஒப் பானது வறுமையே என்று குறித்தார் வள்ளுவர். 'இன்மையின் இன்னுத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னு தது' என்பது அவரது சொல்லமுதமாகும். எற்றுள்ளும் இன்மையின் இன்னுத தில்லை என்றே நான்மணிக் கடிகை நவிலும். கொடியது யாதெனக் கூற வந்த தமிழ் மூதாட்டி யார் கோடிது கொடிது வறுமை கொடிது’ என்று வலி அறுத்திஞர். ஒருவனது இளமைப் பருவத்தில் வறுமை வந் துறுமாயின் அது மிகவும்.கொடியதாக வருத்தும், இளமை யில் கலந்த வறுமையுடன் பிணியும் சேர்ந்து கொள்ளு மாயின் பெருந்துன்பத்தை விளக்கும். இவற்றுக்கு மேல் ஒருவனுக்குச் சிறிதும் அன்பில்லாத மனைவியும் அமைந்து விட்டால் அவனது துன்பத்திற்கு எல்லையே இல்லை. இத்தனை துன்பங்களுடன் அவ் அன்பில்லாத மனைவியின் கையால் அமுது படைக்க, உண்ணவேண்டிய நிலை ஏற்பட் உசலோ எண்ணரிய துன்பமே எய்துவான்.
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/66
Appearance