உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிகையும் கஅமையும் திதி ஒண்பொருள் ஒன்ருே தவக்கல்வி ஆள்வினை என்றிவற்ருன் ஆகும் குலம்’ என்பது முனிவர் ஒருவர் பொருண்மொழியாகும். இக் கருத்தை மற்ருெரு நாலடிப் பாடலும் நன்கு வலியுறுத்தும். 'ச:ன்ருண்மை சாயல் ஒழுக்கம் இவை மூன்றும் வான்தோய் குடிப்பிறந்தார்க் கல்லது-வான்தோயும் மைதவழ் வெற்ப படாஅ பெருஞ்செல்வம் எய்தியக் கண்ணும் பிறக்கு” குடிப்பிறந்தார்க்கு அன்றி, மற்றையோர்க்குப் பெருஞ் செல்வம் பெற்றவிடத்தும் நற்பண்புகள் அமையா என் பதை இப் பாடல் அறிவுறுத்திய தன்ருே ! மலே போன்ற மாண்புடைய மக்களும் தம் பெருமை குன்று தற்குக் காரணமான இழிசெயலைக் குன்றிமணி அளவாயினும் செய்யார். அதனைச் செய்வதால் கைம் மாருகப் பலகோடி செல்வம் வருவதாயினும் வழிவழியாக ஈட்டி நாட்டிய இசையினே இழக்கத் துணியார். பண் புடையார், பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலச்' என்பார் இளம்பெருவழுதியார். மிகவும் சிறிய செயல் தானே என்று எண்ணிக் குடிப்பிறந்தார் இழிசெயல் ஒன்றைப் புரியத் துணிவசாயின் அவரது தொல்புகழ் முழுதும் அழிந்தொழியும். ஆதலின் பழம்பெருங்குடியினர் என்றும் பெருமை குன்றும் செயலச் சிறிதும் புரியார் என்று இயம்பினர் வள்ளுவர். அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறத்தார் குன்றுவ செய்தல் இலக்' என்பது அவர் சொல்லமுதலாகும். வ. சொ.-iii -5