பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிமையும் கனமையும் 67 குடிப்பெருமை குன்ருது வாழ்வோம் என்ற உறுதி புடைய பெருமக்கள் வறுமையுற்ற வழியும் நெஞ்சில் சிறிதும் வஞ்சகம் எண்ணுர். தம் மரபிற்குப் பொருந்தாத மாணிலாச் செயல்களைக் கருதவும் செய்யார். ஒருகால் தமது உறுதியில் தளர்ந்து சிறு செயல் புரிவராயின் அது பெருங்குற்றமாகப் பிறரால் இகழ்ந்து பேசப்படும். வானத்தில் ஒளிரும் மதியிடத்துள்ள மறு, மிகச் சிறிய தாயினும் அஃது எல்லோரும் காண விளங்குதல்போலக் குடிப்பிறந்தார் செய்த சிறு குற்றம் பெருங்குற்றமாக விளங்கித் தோன்றும். 'குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக் கண் மறுப்போல் உயர்ந்து' என்பது வள்ளுவர் சொல்லமுதமாகும். இக் கருத்தை மற்ருெரு வகையால் விளக்கிளுர் சமணமுனிவர் ஒருவர். வானத்தில் உலவியவண்ணம் நிலவைப் பொழியும் திங்க ரூம் வையத்தில் இலகியவண்ணம் அறிவைப் பொழியும் சான்ருேரும் ஒப்பாவர். திங்களிடத்தே என்றும் மாருத களங்கம் காணப்படும். ஆளுல், குடிப்பிறந்த சான்ருேச் பால் களங்கத்தைக் காண்டலரிது. அவரைச் சிறு மாசு வந்து சேசினும் தெருமந்து தேய்வர் என்று மொழிந்தார் அம்முனிவர். முன்றுறையரையனர் இதே கருத்தை விளக்குத் திறம் மிகவும் தன்ருயிருக்கிறது. இழிந்த குலத்தில் பிறந்த கயவர்கள் எத்தனை பழிபாவங்களைச் செய்தாலும் ஒன்றேனும் பிறரால் உணரப்படுவதில்லை. குடிப் பிறந்தார் சிறியதொரு குற்றத்தைப் புரிந்தாலும் ம.இ. மேலிட்ட விளக்கைப்போல் அது மங்காது விளங்கித் தோன்றும் என்று விரித்துரைத்தார்.