證響 வள்ளுவர் சொல்லமுதக் கன்றி முதிர்ந்த கழியப்பன் ஆன்செயினும் ஒன்றும் சிறியார்கண் என்ருனும்-தோன்ருதாம் ஒன்ருய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம் குன்றின்மே லிட்ட விளக்கு" என்பது பழமொழிப் பாடலாகும். வழி வழியாக வரும் குலநலமுடையார் உள்ளம், இயல்பாகவே அருள் வெள்ளம் பெருகும் உயர்வுடைய தாகும். அத்தகையாரிடம் அருளின்மை காணப்படு: 19ாவின் அவருடைய குலப்பிறப்பில் பிறர் ஐயுறுவர். அவர்கள் குற்றமுடைய சொற்களை ஒருபோதும் கூருர், இன்சொற்களையே எஞ்ஞான்றும் பேசுவர். கரும்பினைப் பற்களால் கடித்துச் சுவைத்தாலும் கணுக்கள் சிதைவுறுமாறு இடித்துச் சாற்றை எடுத் தாலும் அக் கரும்பு இனிப்பதன்றிக் கசப்பதில்லேயன்ருே' அஃதேபோல் குடிப்பிறந்த நல்லாரைப் பொல்லார் பழித்துப் பொல்லாங்கு சொல்லினும் அவர்கள் தம் வாயால் தீயசொற்களைப் பேசார், 'கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி இடித்துத் கொன்னினும் இன்சுலைத்தே யாகும் வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார் கூகுத்தம் வாயில் சிதைத்து' என்பது நாலடிப் பாடலாகும். ஒருவன் பேசும் சொற்களைக் கருவியாகக் கொண்டு அவனது குடிப்பிறப்பின் பெருமை சிறுமைகளே அளந்து விடலாம். நிலம், பண்பட்ட தலமும் வளமும் உடைய தாயின் அதன்கண் இட்ட வித்து நன்கு முளைத்துக் கிளைக்கும். வளமற்ற பாலே நிலமாக இருந்தால் அதன் கண் இட்ட வித்துச் செத்தொழியுமன்றே ! நிலத்தில்
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/74
Appearance