உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிகையுக் ககமையும் 鄧象 தோன்றிய முளைநலத்தால் நிலப்பெருமை புலப்படுவ தாயிற்று. அஃதேபோல் ஒருவன் வாயிற் பிறந்த சொல் லால் அவனது குலதலம் புலனுகும் என்ருர் பொய்யில் :புலவர். 'நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குல்த்தில் பிறந்தார்வாய்ச் சொல்' என்பது அவர் வாய்மொழியாகும். இப் பாடற்கு எளிதில் புலனுகும் மற்ருேள் உரையும் எண்ணத்தகும். செம்மண் நிலத்திலோ, கரிசல் புலத்திலோ நடந்தான் ஒருவன் காலப் பார்த்த வளவில் அவன் மிதித்துவந்த மண்ணின் திறத்தை மதித்தறியலாகும். அதுபோல ஒருவன து வாய்ச்சொல்லால் அவனது குடிப்பிறப்பை அறிய முடியும் என்பது எளிதில் கொள்ளும் பொருனாகும். குடிப்பிறந்தார்க்கு அமையவேண்டிய பண்புகளுள் பணிவும் ஒன்ருகும். பணிவும் இன்சொல்லும், மக்கட்கு அணியென்று கூறுவர் அறிஞர். எத்தகையார்க்கும் பணிவு ஓர் இனிய பண்பாகும். செல்வர்க்கும் குடிப் பிறந்தார்க்கும் அமையும் பணிவு, அவர்கள் பெற்ற மற்ருெரு செல்வமாகவே மதிக்கப்படும். ஆதலின் குலம் வேண்டின் யார்க்கும் பணிவு வேண்டுக’ என்று பகர்ந் தருளிஞர் வள்ளுவர். ஒழிபியலின் தொடக்கத்தில் குடிமையை வகுத் துரைத்த வள்ளுவர், கயவரைப்பற்றிப் பொருட்டாலின் கடைசியில் புகலுந் திறம் கூர்ந்து நோக்கும் தரமுடைய தாகும். அதிகாச அமைப்பிலேயே கயவரது இழிவைக் காணுமாறு செய்யும் பொய்யில் புலவரின் புலமைத் திறம் நம்மால் அளந்து சொல்லும் தசமுடையதன்று. உயர் குடிப் பிறந்தார்க்கு உரியவான நற்குணங்களுள் ஒன்